சேனலில் இருந்து மணிமேகலையை வெளியே அனுப்பி இருக்காங்க.. நடந்தது இதுதான்! பிரியங்காவிற்காக ஷகிலா கோபம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்திருக்கும் நிலையில் நடிகை ஷகிலா பிரியங்காவிற்கு ஆதரவாக மணிமேகலை பற்றி பல்வேறு தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாதியிலேயே மணிமேகலை வெளியேறிய எபிசோடு ஒளிபரப்பானதை தொடர்ந்து ரசிகர்கள் மணிமேகலை எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன், அதற்கு காரணம் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்.

அதற்கு சேனல் தரப்பில் சொன்ன பிறகும் சரியான நடவடிக்கை இல்லை. எனக்கு தன்மானம் முக்கியம். அந்த தொகுப்பாளரிடம் என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள் நான் முடியாது என்று வந்துவிட்டேன் என்று நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு ஒரு வீடியோவிலும் விளக்கம் கொடுத்திருந்தார். இதுதான் இன்று வரைக்கும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மணிமேகலை பேசியது பிரியங்காவை தான் என்று பிரியங்கா உட்பட எல்லோருக்குமே தெரியும் வகையில் தான் மணிமேகலை குறிப்பிட்டு இருந்தார்.
பிரியங்கா பெயரை மட்டும் சொல்லாமல் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்று தெளிவாக அடையாளப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் பிரியங்காவை அதிகமாக விமர்சித்து வருகிறார்கள். விஜய் டிவியில் பிரியங்கா அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டிருப்பதால் தான் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும், பிரியங்கா வேறு மாநிலத்தவர் அடுத்த மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தமிழ் தொகுப்பாளருக்கு வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் இன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.
அதோடு பிரியங்கா ரொம்ப மோசமா அதனால் தான் பிரியங்காவின் கணவர் அவரை பிரிந்து விட்டார் என்றெல்லாம் பிரியங்காவை வசைப்பாடி வருகிறார்கள். இந்த நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவாக ஷகிலா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் அதில் அவர் பேசுகையில், மணிமேகலை அவராக நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று சொல்லி இருந்தார்.

அதோடு எனக்கு தன்மானம் அதிகம் என்று சொல்கிறாரே ஆனால் அவரை விஜய் டிவியில் இருந்து தான் வெளியேற்றி இருக்கிறார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியை சுமூகமாக கொண்டு போய் முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு மணிமேகலை முடியாது என்று சொன்னதும் நீங்கள் அப்போ போகலாம் என்று சேனல் தரப்பில் இருந்து தான் சொல்லி இருக்கிறார்கள்.
மணிமேகலை அவராக கிளம்பி வரவில்லை. அவர் சொன்னது உண்மை என்று நம்பி இணையத்தில் பலர் பிரியங்காவிற்கு எதிராக கருத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திருமணமாகி விவாகரத்து ஆன பொண்ணை அவருடைய தனி நபர் குடும்பத்தை பற்றி பேசுவதற்கு எந்த ரசிகருக்கும் உரிமை கிடையாது. அவருடைய வேலையில் மட்டும் தான் குறை இருந்தால் யாரும் சொல்ல வேண்டுமே தவிர அவருடைய குடும்ப விஷயத்தை பற்றி எல்லாம் கருத்து போடுகிறார்கள் அது எப்படி பேசலாம்?
பிரியங்கா ரொம்ப திறமையான பொண்ணு. அதை பல பேருக்கு பொருத்துக்க முடியல. அவளை விட சின்ன பையன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவளை அக்கான்னு சொன்னதில் என்ன தப்பு இருக்கு? அதுக்கு கூட பிரச்சனை பண்ணுறாங்க? அது கூட விமர்சிக்கிறாங்க! நான் பிரியங்காவிற்கு தான் சப்போர்ட் செய்வேன். பிரியங்கா தன்னுடைய வேலையை சிறப்பா செஞ்சாங்க.
எந்த இடத்தில் இருந்தாலும் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைக்கணும்னு அவங்க பேசுவாங்க. அதை பொறுத்துக்க முடியல. அவங்களுக்கு மட்டும் அதிகமா நிகழ்ச்சி கிடைக்கிறதே என்று ஒரு பொறாமையில் தான் இந்த மாதிரி எல்லாம் வதந்தி பரப்புறாங்க. அதுபோல சமூக வலைதளத்தில் தப்பாக கமண்ட் போடுகிறவர்கள் மணிமேகலைக்கு எந்த நிகழ்ச்சியும் கொடுத்திட முடியாது.
மணிமேகலை பிரியங்காவை பற்றி தப்பா சொன்னதால பிரியங்காவிற்கு சேனலில் நிகழ்ச்சி கொடுக்காமல் விட்டு விட மாட்டாங்க. அவங்க தொடர்ந்து நிகழ்ச்சியில் வேலை பார்க்க தான் போறாங்க. அப்போ இப்படி கமெண்ட் போட்டுட்டு இருக்கிறவங்க என்ன செய்வாங்க? நம்மால் கமெண்ட் போட முடியும் என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசலாமா? என்று கோபமாக அந்த பேட்டியில் சகிலா பேசியிருக்கிறார்.
ஷகிலா கேட்ட கேள்வி சரிதானா? மணிமேகலை மற்றும் பிரியங்கா சம்பவத்தில் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்றீங்க? உங்க கருத்தை உரக்க சொல்லுங்க பாப்போம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications