விஜய் டிவிக்கு அழிவு காலம்! 'அகோரி'யையும், 'ஜாதி சப்போர்ட்டர்' திவாகரையும் எடுத்தா எப்படி? ஷகிலா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய பிம்பத்துடன் வலம் வந்த நடிகை ஷகிலா 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குப் பிறகு, ரசிகர்களிடம் பாசமிகு அம்மாவாகப் பெரிய வரவேற்பைப் பெற்றார். அப்படி ஒரு பெரிய புகழை அவருக்கு வாங்கித் தந்த விஜய் டி.வி-யையே, இப்போது வெளிப்படையாக விமர்சித்துப் பேசியிருப்பதுதான் இணையத்தில் ட்ரெண்டிங்!

விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியின் தேர்வுகளைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஷகிலா, ஆக்ரோஷமான ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

Shakeela Vijay TV Bigg Boss

ஷகிலா

'குக் வித் கோமாளி' மூலம் விஜய் டி.வி-யின் செல்லப் பிள்ளையாக மாறிய ஷகிலா, பிக் பாஸ் சீசன் 9-ல் சில சர்ச்சைக்குரிய போட்டியாளர்களைத் தேர்வு செய்ததைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஷகிலாவின் பேச்சில் இருந்த கிண்டல் கலந்த ஆதங்கத்தைப் பார்த்தால், "விஜய் டி.வி.க்கு நான் தான் அழிவு காலத்தை முன்னாடியே சொல்லிட்டுப் போறேன்" என்று சொல்வது போலவே இருந்தது. ஷகிலா நேரடியாக இரண்டு போட்டியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.

வாட்டர் மெலன் திவாகர்

ஷகிலா கோபத்தின் உச்சிக்கே போனது, சோஷியல் மீடியா பிரபலம் திவாகர் விஷயத்தில்தான்!. "திவாகர் என்ன சாதித்துவிட்டார்னு அவரை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எடுத்தாங்கன்னு தெரியல. அவர் ஒரு அரை மென்டல்! அவர் பேசுறதை எல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியாது!" என்று கொதித்தார். அவரைப் பிக் பாஸ் எடுத்ததற்குக் காரணம் என்னவென்றால், திவாகர் சமீபத்தில் ஒரு ஜாதிப் படுகொலைக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் என்றும், அதற்காகத் தான் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தேன் என்றும் ஷகிலா வெளிப்படுத்தினார்.

"நான் ஒரு விஜய் டி.வி. பிரபலமாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை எடுக்கும்போது, 'விஜய் டி.வி. பிரபலத்தின் வழக்கு இவர் மீது இருக்கிறதே, எப்படி செலக்ட் பண்ணலாம்' என்று ஏன் யோசிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "அவர் ஒரு டாக்டர்னு சொல்லிக்கிறார். ஆனா, டாக்டர் போலவா நடந்துக்கிறார்?" என்றும் கிண்டலடித்தார்.

அகோரி கலையரசன் & போலி பிரிவினை

அடுத்த குட்டு, போட்டியாளர் கலையரசன் மீது விழுந்தது!. "கலையரசன் சில மாதங்களுக்கு முன்னாடி என்னிடம் பேட்டி கொடுக்க வந்தப்போ, 'மனைவியைப் பிரிந்து விட்டேன்'னு சொன்னார். நான் கூட, 'உங்களுக்கு வியூஸ் குறைஞ்சிடுச்சா? அதனால இப்படிப் பேட்டி கொடுக்க வந்திருக்கீங்களா?'ன்னு கேட்டேன்" என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

"பிரிஞ்சிட்டோம்னு சொன்ன புருஷன், பொண்டாட்டி அப்படியே பிரிஞ்சிருக்கணும்னு நான் சொல்லலை! ஆனா, பிரிஞ்சுட்டோம்னு ஒருத்தர மாத்தி ஒருத்தர் அவ்வளவு பேசினாங்க. இப்போ சேர்ந்துட்டோம்னு யார்கிட்டயாவது சொன்னாங்களா?" என்று கேள்வி எழுப்பிய ஷகிலா, "பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன கலையரசன், 'நானும் என் பொண்டாட்டியும் பிரிஞ்ச கண்டன்டுதான்!'னு சொல்றாரு!" என்று, எல்லாமே 'கன்டென்ட்டுக்காக'த்தான் நடக்குதுன்னு வெளிச்சம் போட்டுக் காட்டினார்!

இதோடு நில்லாமல், கலையரசன் குறித்து ஒரு பயங்கரத் தகவலையும் ஷகிலா வெளியிட்டார்! "நான் அகோரி; மனித மாமிசத்தை சாப்பிடுகிறேன்" என்று கலையரசன் அவரிடம் சொன்னதாகவும், அதையும் தாங்கள் ஒளிபரப்பியதாகவும் கூறினார். "அப்படிப்பட்ட ஒருத்தரை பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுருக்காங்க. அவர் பக்கத்துல இருக்கிறவங்க யாரையாவது பிடிச்சுச் சாப்பிட்டா என்ன பண்ணுவீங்க?" என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்!

விஜய் டி.வி.க்கு அழிவு காலம்

சினிமாவில் என்னதான் சர்ச்சைகள் இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு பாசக்கார 'ஆண்டி'யாக மாறிய ஷகிலாவின் இந்தக் கோபப் பேச்சு, "கன்டென்ட்டுக்காக எதை வேணாலும் செய்யலாம்" என்ற பிக் பாஸ் டீமின் தேர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

"இப்படி கண்டென்ட்டுக்காக என்ன வேணாலும் செய்தவர்களை எப்படிப் பிக் பாஸ் வீட்டுக்குள் எடுக்குறாங்க?" என்று ஆதங்கப்பட்ட ஷகிலா, இறுதியாக, "விஜய் டி.வி.க்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது!" என்று ஒரு சாபத்தையும் கொடுத்திருக்கிறார்!

தனக்குப் புகழைக் கொடுத்த சேனலையே, அதன் கொள்கைகளுக்காக விமர்சித்த ஷகிலாவின் இந்தத் துணிச்சல், நெட்டிசன்களிடம் பெரிய பாராட்டுகளை அள்ளிவருகிறது! ஷகிலாவின் இந்த 'வாக்கு' பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+