விசித்ராவுக்கு பாலியல் சீண்டலா! நம்புற மாதிரியா இருக்கு? கேள்விகளை அடுக்கிய நடிகை ஷகிலா
சென்னை: பிக்பாஸில் கதை சொல்லல் டாஸ்கில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து விவரித்ததை நடிகை ஷகிலா விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது முதலே விறுவிறுப்பாக போகிறது. சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50ஆவது நாளை கடந்த நிலையில் பூகம்பம் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பூகம்பங்களை போட்டியாளர்கள் தெரிவிப்பதுதான் அந்த டாஸ்க். அந்த வகையில் நடிகை விசித்ரா, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு பிளாஷ்பேக்கை வெளியிட்டார்.
அதில் அவர் தெலுங்கு படத்தில் நடித்த போது உச்ச நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அது போல் ஸ்டன்ட் இயக்குநரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இவர்களின் லீலைகளை இயக்குநரிடம் சொன்ன போது தன்னை அடித்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்திருந்தார். அது போல் அவர் அந்த ஷூட்டிங்கிற்காக தங்கியிருந்த ஹோட்டலில் கூட அவர்களால் பிரச்சினை வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த ஹோட்டலின் பொது மேலாளராக இருந்த தனது கணவர்தான் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். விசித்ராவுக்கு உதவியாக இருந்த கணவர் ஹாஜிக்கு பிக்பாஸில் கமல்ஹாசன் பாராட்டுகளையும் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
மீ டூ போல் தற்போது இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பாகி வருகின்றன. காதல் சரண்யா, மணிஷா உள்ளிட்டோரும் இது போன்ற குற்றச்சாட்டுகளை வெவ்வேறு பிரபலங்கள் மீது வைத்துள்ளனர். விசித்ராவின் கருத்துக்கு நடிகை ஷகிலா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறுகையில் விசித்ரா போன்ற வலிமையான போட்டியாளரை நீங்கள் இதுவரை பிக்பாஸில் பார்த்துள்ளீர்களா என எனக்கு தெரியலை. அப்படியிருக்கும் போது அவர் இது போன்ற பிரச்சினைகளுக்கு எப்படி ஆளாகியிருப்பார் என நீங்கள் நம்புகிறீர்கள் என தெரியவில்லை. விசித்ரா ரவீனாவிடம் கதை ஒன்றை சொன்னார்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஒரு பெண் ஒரு காயத்தோடுதான் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அவர் சொல்கிறார். காரணம் கேட்டால் காவல் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் நமக்கு நேர்ந்த கொடுமை குறித்து நிரூபிக்க சான்றுகள் வேண்டும் என விசித்ரா சொல்லியிருந்தார். அந்த விஷயத்தில் அன்று அவர் செய்த தவறை இந்த விஷயத்தின் சமன் செய்ய நினைக்கிறார் என நினைக்கிறேன்.
அவருக்கு முன்னரே வாய்ப்பு கிடைத்த போதே இந்த விஷயங்களை சொல்லியிருக்கலாமே? அதை விட்டுவிட்டு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கதை சொல்லல் டாஸ்கில் சொல்ல வேண்டிய காரணம் என்ன, அவரது கணவரை அவர் ஹீரோ என்றும் அவர்தான் தன்னை காப்பாற்றிக் கொண்டு போனார் என்றும் விசித்ரா சொல்லியுள்ளார்.
அப்படியானால் இப்போது ஏன் விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார்? அப்போது இந்த மீடியா சினிமாவெல்லாம் வேண்டாம் என்று சொன்ன உங்களது கணவர், இப்போது ஏன் உங்களை மீண்டும் இந்த உலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்? இதற்கு முன் சீரியலுக்கு வந்தீர்களே அங்கு இது போன்ற தொந்தரவுகள் இல்லையா, கண்டிப்பாக இருக்கிறது என ஷகிலா தெரிவித்தார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications