உயிருக்கு போராடும் பிரபல நடிகை.. கேபிஒய் பாலா செய்த உதவி.. கண்ணீர் விட்டு கதறிய ஷகிலா
சென்னை: பிரபல காமெடி நடிகை பிந்து கோஷ் உடல்நிலை சரியில்லாமல் தவித்து வரும் நிலையில் செலவுக்கு கூட காசு இல்லாமல் கஷ்டப்படுகிறார் என்று நடிகை ஷகிலா வீடியோ ஒன்று வெளியிட்டு நடிகர்களிடம் கண்கலங்க வேண்டுகோள் வைத்திருந்தார். இதை பார்த்ததும் கேபிஒய் பாலா நடிகை பிந்துவிற்கு உதவி செய்திருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த பிரபலம் அடைந்த நடிகை பிந்து கோஷ் உடல்நலை சரியில்லாமல் சில வருடங்களாக தவித்து வருகிறார். அவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக பல பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்.

மருத்துவ செலவு
ஆரம்பத்தில் பிந்துக்கு உதவி செய்த சில நடிகர்கள் இப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் பிந்து கோஷ் வருத்தப்பட்டு இருந்தார். தனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதில் மூத்த மகன் தன்னை பார்க்க முடியாது என்று பெங்களூருக்கு போய்விட்டார். இரண்டாவது மகன்தான் என்னை பார்த்துக் கொள்கிறான் ஆனால் எனக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு மாதத்திற்கு பத்தாயிரம் ஆகிறது என்பதால் அவன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்று பிந்து சொல்லியிருக்கிறார்.
நடிகர்கள் உதவவில்லை
நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்து இருக்கிறார். அவர்களிடம் உதவி கேட்டபோது கூட அவர்களும் எந்த ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை என்று பேட்டியில் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பிந்து கோஷ்க்கு உதவ வேண்டி ஷகிலா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நான் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன்.

ஷகிலா வீடியோ
இதே சினிமா துறையில் நம்மை பலரையும் சிரிக்க வைத்த பிந்து கோஷ் இப்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் உயிர் வாழ்வதற்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள். நம்மை வாழ வைத்த சினிமா துறையில் ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய கஷ்டத்தை போக்குவதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

கண்ணீரில் நடிகை பிந்து கோஷ்
சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய உடல் எடையை வைத்து தன்னைத்தானே அவமானப்படுத்தி பலரையும் சிரிக்க வைத்தார். ஆனால் இன்று அவருடைய கண்களில் கண்ணீர் மட்டும் தான் இருக்கிறது. அதனால் அந்த கண்ணீரை துடைப்பதற்கு யாரேனும் உதவி செய்யுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து கேபிஒய் பாலா பிந்துகோஷ் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அவரிடம் 80,000 பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.
பாலா செய்த உதவி
கேபிஒய் பாலாவை ஷகிலா தான் பிந்து வீட்டிற்கு கூட்டிட்டு போயிருக்கிறார். பிந்துவுக்கு பாலா யார் என்றே தெரியவில்லை ஆனாலும் பாலாவை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி இருக்கிறார். அப்போது பாலா உங்களை நான் சின்ன வயசில் சினிமாவில் பார்த்திருக்கிறேன் அம்மா. இப்போ உங்களை இப்படி பாக்குறதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கு.
பாலா சொன்ன ஆறுதல்
நீங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கீங்க. என்னால் இப்போதைக்கு இதுதான் முடியும். இதை வைத்து கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவிகளை நான் உங்களுக்கு செய்கிறேன். உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கிறோம் என்று தன்னம்பிக்கை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாற்றுத்திறனாளிக்கு உதவிய பாலா
அதுபோல கேபிஒய் பாலா மாற்று திறனாளி ஒருவருக்கும் போட் ஒன்று வாங்கி கொடுத்து இருக்கிறார். தனக்கு எந்த தொழிலும் செய்ய முடியாது மீன்பிடிக்க தான் தெரியும். ஆனால் எனக்குன்னு ஒரு போட் இல்ல என்று ஆற்றங்கரை ஓரம் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிக்கு பாலா போட் வாங்கி கொடுத்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications