நடிகை பானுப்ரியாவின் தங்கை.. எங்க ஊரு பாட்டுக்காரன் "செண்பகம்”.. அடடா செம மோட்டிவேஷன் தான்
சென்னை: நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாந்தி பிரியா தற்போது வெளியிட்ட வீடியோ இணையத்தில் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
அதுபோல நடிகை சாந்திப்பிரியா பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான். இந்த நிலையில் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களையும் சத்யபிரியா வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவை விட்டு பல வருடங்களாக விலகி இருக்கும் சாந்தி பிரியா லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு மட்டும் வயதே ஆகவில்லையா? என்று வியந்து போயிருக்கின்றனர்.
80ஸ் கிட்ஸ் ஃபேவரிட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியானது. இதில் கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா நடித்திருப்பார்.

முதல் திரைப்படம் சாந்திப்ரியாவுக்கு இதுதான் என்று சொல்ல முடியாத அளவிற்கு இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இந்த நடிப்பின் மூலமாகவே தமிழக மக்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்து விட்டார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களோடு தொடர்ந்து படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகை பானுப்ரியாவின் தங்கைதானாம். இந்த நிலையில் இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் ஹிந்தி டிவி சீரியல்களில் நடிக்க சென்று இருக்கிறார். இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு இவர் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு திரை உலகை விட்டு விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் எதனால் சத்யபிரியா தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் வேண்டாம் என்று தமிழ் சினிமாவை விட்டு போகவில்லை. எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதே நேரத்தில் பிற மொழிகளில் வாய்ப்பு அதிகரித்து இருந்தது. அதனால் தான் அங்கே போனேன். இப்போதும் தமிழில் திரைப்படங்களில் எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் நான் உடனே ஓகே சொல்லி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
அத்தோடு எப்போதுமே வயது என்பது ஒரு நம்பர் என்பதை சத்யபிரியா நிரும்பித்து இருக்கிறார். இந்த வயதிலும் பிட்டாக இருப்பதற்காக அடிக்கடி உடற்பயிற்சி செய்து அதை பிறரும் பாலோ பண்ண வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த 90ஸ் ரசிகர்கள் இவருக்கு மட்டும் வயது ஆகவே இல்லையே நாங்கள் பிறப்பதற்கு முன்பே நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பார்த்தோம். ஆனால் இப்போதும் கதாநாயகி மாதிரியே இருக்காங்களே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக சத்திய பிரியா மாடலிங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை பானுப்பிரியாவோடு எடுத்த புகைப்படங்களும் அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அப்போது அவரிடம் நடிகை பானுப்ரியாவின் ரசிகர்கள் பலர் பானுப்ரியா இப்போது எப்படி இருக்கிறார் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள்.

-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications