Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலிடம் பேச சொல்லி முதுகில் அடித்த சந்தான பாரதி! அழுகிய முட்டை மிரட்டல்! சாந்தி வில்லியம்ஸ் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்டி ஒலி சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை சாந்தி வில்லியம்ஸ் பல சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை மற்றும் சினிமாவில் சந்தித்த நடிகர்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து பல விஷயங்களை சாந்தி வில்லியம்ஸ் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நடிகை சாந்தி வில்லியம்ஸ் பல வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவருடைய கணவர் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்த பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த சாந்தி கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் மீண்டும் சினிமாவில் அம்மா, மாமியார் கேரக்டரில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சாந்தி வில்லியம்ஸ் நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசி இருக்கிறார்.

Actress Shanthi Williams talked about many things about actor Kamal Haasan

அதில் கமல்ஹாசன் குறித்து ஒரு சிலர் தப்பு தப்பாக பேசலாம். ஆனால் என்னை பொருத்தவரையில் அவர் ரொம்பவே நல்ல மனுஷன். பெரிய கலைஞர் அவரைப்போல இன்னொருவர் வர முடியுமா என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு திறமை உள்ளவர். நானும் அவரும் சின்ன வயசுலையே ஒன்றாக டான்ஸ் பிராக்டிஸ் செய்து இருக்கிறோம்.

எனக்கு 11 வயதில் இருக்கும்போது தங்கப்பன் மாஸ்டர் கிட்ட பிராக்டிஸ் போயிருக்கிறேன். அப்போ நாங்கள் இருவரும் "முக்கிட்கலை என் கண்ணம்மா" என்ற படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். அந்த படம் முழுக்கவே டான்ஸ் குரூப் பற்றிய கதை. அப்போது எனக்கு கமல்ஹாசன் தான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். அதனாலையே நான் அவரை இப்ப வரைக்கும் குருஜி என்று தான் கூப்பிடுவேன்.

ஆனால் கமல்ஹாசனுக்கும் என்னுடைய கணவருக்கும் சின்ன பிரச்சனை. அதனால் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நல்லபடியாகத்தான் நட்பு இருந்தது. ஒரு திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கும் போது இருவருக்கும் கைகலப்பு வரைக்கும் ஆகிவிட்டது. என்னுடைய கணவர் நல்ல ஒளிப்பதிவாளராக இருந்தாலும் ஷார்ட் டெம்பர் டக்கென்று கோபப்பட்டு விடுவார்.

அதுபோலத்தான் கமல்ஹாசனும் அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. நான் வில்லியம்ஸை செய்து திருமணம் செய்தது கமலுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. ஆனாலும் நான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையை கண்டு கொள்வது கிடையாது. ஒரு சில முறை ஷூட்டிங்கில் கமல்ஹாசன் என்னை பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார்.

அதற்குப் பிறகு தான் அன்பே சிவம் சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம் அப்போ எனக்கு மெட்டி ஒலி சீரியலுக்கான சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கமல்ஹாசன் அங்கு வந்தார்... அப்போது போனில் பேசியபடியே பிளாக் அண்ட் பிளாக்கில் வந்து கொண்டிருந்தார். நான் அவரை பார்க்காத மாதிரி இன்னொரு பக்கத்தில் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது சந்தான பாரதி அண்ணா வந்து என் முதுகில் ஓங்கி அடித்து விட்டார். நான் யாருப்பா இப்படி அடித்தது என்று திரும்பிப் பார்த்தால் சந்தான பாரதி அண்ணா நின்னாங்க. அவங்க கமல்ஹாசன் வந்து இருக்கான் போய் பாரு என்று என்னிடம் சொன்னாங்க அதற்கு நான் நான் ஏன் அவரை போய் பார்க்கணும் என்று சொல்லிட்டு இருக்கும்போதே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் வந்துட்டாரு. அவர் என்னை பார்த்து இங்க வா என்று கூப்பிட்டார். நான் பயந்து போய் அவரிடம் போனேன் பிறகு நார்மலாக பேசிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே எனக்கு கமல்ஹாசன் மீது ஒரு பயம் இருக்கும் காரணம் நானும் ஸ்ரீதர் மாஸ்டரும் ஆரம்பத்தில் ஒரு நாடகம் நடித்தோம். அந்த நாடகம் நடிக்கும் போது கமல்ஹாசன் சின்ன பையன் தான். அப்போதே என்னை அதிகமாக மிரட்டுவார். ஒருமுறை நாடகத்திற்கு நான் ரெடியாகிகொண்டிருக்கும் போது கையில் முட்டை, தக்காளியை கொண்டு வந்து நீ இன்னைக்கு நாடகம் சரியா நடிக்கலனா இதை தூக்கி உன் மேல அடிக்க போறேன் என்று பயம் காட்டி இருந்தார்.

பிறகு அவர் சொன்னது போல நான் மேடையில் நின்று பார்க்கிறேன். முதல் வரிசையில் அவர் கையில் தக்காளியையும் முட்டையையும் வைத்துக்கொண்டு இருக்கிறார். எனக்கு அவரைப் பார்த்ததுமே டயலாக் மறந்து போச்சு. கொஞ்ச நேரம் அங்கே திணறிக் கொண்டு இருந்தேன். பிறகு ஸ்கிரீனை மூட சொல்லி விட்டு ஓடி வந்து ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தேன். அப்போது கமல் தான் என்னை வந்து சமாதானப்படுத்தினார்.

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நீ நல்லா நடிக்கணும் என்று உனக்கு மோட்டிவேஷன் பண்ணுவதற்காக தான் வந்தேன் என்று சொன்னார். அப்போது ஸ்ரீதர் மாஸ்டர் வந்து இப்படியா மிரட்டுவ என்று கமல்ஹாசனை திட்டி அனுப்பினார். அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது என்று பழைய நினைவுகளை அந்த பேட்டியில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+