திமிரு ஈஸ்வரியாக நடித்த அர்ச்சனா பற்றி அந்த கேரக்டர் நடிகை சொன்ன வார்த்தை.. இப்படி ஓப்பனா சொல்லி விட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அர்ச்சனா டான்ஸ் ஒன்றில் திமிரு படத்தில் ஈஸ்வரியின் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அதே திமிரு படத்தில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து இருந்த நடிகை ஸ்ரேயா ரெட்டி இடம் அர்ச்சனா நடிப்பு குறித்து கேள்வி கேட்க ஸ்ரேயா பதில் அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் நடிப்பை பலர் பாராட்டி இருந்தாலும் ஈஸ்வரி கேரக்டரில் நடித்த ஸ்ரேயா ரெட்டி சொன்ன வார்த்தை குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கின்றனர். அவர்களில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்போது ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக அர்ச்சனா மாறியிருக்கிறார்.
இவர் ஏற்கனவே தொகுப்பாளராக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லியாகவும் நடித்திருந்தார். ஆனால் திடீர் என்று அந்த சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் சில மாதங்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொண்டார். அதனால் அவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர் நபர் தான்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலேயே பிரதீப்புக்கு சப்போர்ட் பண்ணி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை அர்ச்சனா பிடித்துவிட்டார். அதிலும் மொத்த போட்டியாளர்களும் தனக்கு எதிராக குரல் எழுப்பி சண்டை போட்ட நிலையில் அனைவரையும் தனியாக நின்று ஓட விட்டிருந்தார். அதன் மூலமும் அர்ச்சனா அதிகமானவரை கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மராத்தான் டாஸ்க் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் அர்ச்சனாவிற்கு திமிரு படத்தில் ஈஸ்வரியின் கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் தனக்கு வில்லி கேரக்டர் கொடுத்திருக்கிறார்களே என்று அழுது கொண்டு இருந்த அர்ச்சனா பிறகு பிக்பாஸ் எடுத்து சொன்னதும் புரிந்து கொண்டு தன்னுடைய கேரக்டர் படி டாஸ்க் முழுவதுமே நடித்து இருந்தார்.
அதிலும் அவர் மதுரை வட்டார மொழியில் அப்படியே கெத்தாக ரியலாக அந்த திமிரு படத்தில் ஈஸ்வரி பேசுவது போன்றே பேசி அந்த டாஸ்க் வின்னர் ஆகவும் ஆகியிருந்தார். ரசிகர்களின் மனதையும் கவர்த்து இருந்தார். இந்த நிலையில் திமிரு படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டியிடம் பேட்டி ஒன்று தொகுப்பாளர் அர்ச்சனாவின் நடிப்பு பற்றி கேட்டிருக்கிறார்.

அதற்கு ஸ்ரேயா ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் நன்றாக நடித்திருந்தார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் அர்ச்சனாவின் நடிப்பை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு உங்களிடம் சொல்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஸ்ரேயா ரெட்டி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்பதை வெளிப்படையாக இவர் பேசி இருப்பதை பலர் பாராட்டி வருகிறார்கள்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications