சில்லுன்னு ஒரு காதல் கதை.. அந்த குட்டி பாப்பா இப்ப வக்கீல் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில்லுன்னு ஒரு காதல் படத்துல க்யூட்டான குட்டிப் பாப்பாவா வந்தாங்களே ஸ்ரேயா சர்மா அவங்க இப்போ வக்கீலாய்ட்டாங்க தெரியுமா.. அந்தக் கதை.

சில்லுனு ஒரு காதல் பட குழந்தை நட்சத்திரமாக நடிச்ச ஸ்ரேயா சர்மா தாங்க இப்போ இன்ஸ்டாகிராம் செம்ம ஹாட். படு வேகமாக காலம் ஓடுவதற்கு ஸ்ரேயாவும் ஒரு நல்ல உதாரணம்தான்.

நேற்றுதான் பார்த்த மாதிரி இருக்கிறது அவரது க்யூட்டான குட்டிப் பாப்பா நடிப்பை.. ஆனால் காலம் ஓடி விட்டது பாருங்க. வளர்ந்து ஆளாகி இப்போது வக்கீலாகவும் மாறியுள்ளார் ஸ்ரேயா சர்மா.

சூர்யா ஜோதிகா மகள்

சூர்யா ஜோதிகா மகள்

ஆமாங்க சில்லுனு காதலில் சூர்யா ஜோதிகாவின் குழந்தையாக வந்து ஜோதிகாவை பாடாய் படுத்திய அந்த குழந்தை தாங்க இப்போ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ச்சியில் பாடாய்படுத்தி தூங்கவிடாமல் பண்ணுது. கவர்ச்சி மட்டுமா.. அதை விட முக்கியமாக வக்கீலாகவும் அவர் புது அவதாரம் எடுத்துள்ளார் என்பதுதான் விசேஷமானது.

நடிப்பும் படிப்பும்

நடிப்பும் படிப்பும்

ஸ்ரேயா சர்மாவுக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய முன்னணி கதாநாயகியாக வரணும்னு ஆசையாம். அப்படி தான் கடும் முயற்சி எடுக்க தெலுங்கில் காயகுடு படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்குல அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் படிப்பு ஒரு புறம் ஒன்று ரொம்ப பிசியாக இருக்கிறாராம்.

நான் ரெடிதான்

நான் ரெடிதான்

இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டு இருக்கிறாராம். அதுலதான் அப்பப்போ தன்னுடைய ஹாட் போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து தூங்க விடாம பண்ணுகிறார். கூடவே வக்கீல் படிப்பையும் முடித்து விட்டார். சரி தமிழில் ஹீரோயினாக எப்ப நடிப்பீங்க என்று கேட்டால் சிரிக்கிறார். நான் ரெடிதான்.. வாய்ப்பு வரணுமே என்று சொல்கிறார்.

வந்தால் நல்லாருக்கும்

வந்தால் நல்லாருக்கும்

உண்மையில் தமிழில் இப்போது நல்ல ஹீரோயின்களுக்கு பஞ்சம்தான். இவர் வந்தால் கூட நல்ல வாய்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் இன்னும் அந்த குழந்தை முகம் மாறாமல் இருக்கிறது ஸ்ரேயாவிடம். எல்லோரும் இவரை சூர்யா ஜோதிகா மகளாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தானோ என்னவோ தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு வராமல் போய் விட்டதா என்று தெரியவில்லை.

யூடியூப் சானல் தொடக்கம்

யூடியூப் சானல் தொடக்கம்

அதை விட சூப்பராக ஒரு வேலை செய்து வருகிறார் ஸ்ரேயா சர்மா. அதாவது தனியாக ஒரு யூடியூப் சானல் ஆரம்பித்துள்ளார். அதில் எடைக் குறைப்பு உள்ளிட்வை குறித்த டிப்ஸும் தந்து அசத்துகிறார். அவர் மட்டுமல்லாமல் அவரது தாயார் ரீத்து சர்மாவும் அதில் பல டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த சானலில் தற்போது அதிக அளவிலான வீடியோக்கள் வருவதில்லை. முழுமையாக வக்கீலாக மாறி விட்டார் போலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+