கணவர் இறப்பிற்குப் பிறகு நடிகை “ஸ்ருதி” வெளியிட்ட உருக்கமான பதிவு..இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் மூலமாக ராகினி கேரக்டரில் அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீரென்று உயிரிழந்து இருக்கிறார்.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதாக இருக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதிக்கும் அவருடைய கணவர் அரவிந்த் சேகருக்கும் கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக ஸ்ருதி உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக யாருக்கு எப்போது வாழ்க்கை முடிகிறது என்று தெரியாத சூழ்நிலைகள்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னதான் பணமும் புகழும் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அது எப்போது எப்படி வரும் என்று தெரியாவிட்டாலும் அந்த மரணத்தால் நெருங்கியவர்களின் பிரிவை ஏற்றுக்கொள்ளாமல் அவரை நேசித்தவர்களும் பலர் தினமும் மனதளவில் மரணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். அவர் உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வந்தார். 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவிற்கும் அரவிந்திற்கும் கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது.
நடிகை ஸ்ருதி, நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்மு குட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவார்.
இந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் திடீரென்று இறந்து போன பிறகு பிறகு முதல்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில்," பிரிந்தது உடல் மட்டும் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது. நீங்கள் நிம்மதியாக இருங்கள் அன்பே, உங்கள் மீதான எனது அன்பு இப்போதும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். அதுபோல உன்னை மிஸ் பண்ணுகிறேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த். என் அருகில் நீ இருப்பதை என்னால் உணர முடிகிறது" என்று கூறி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவுக்கு அதிகமான ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய ஆறுதல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகை ரஷ்மிதா, "அன்பே நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம். தயவு செய்து வலுவாக இருங்கள்" என்றும் நடிகை ஹேமலதா, "ஸ்ட்ராங்காக இருங்கள் அன்பே" என்றும் நடிகை தியா மேனன், "இந்த செய்தி இதயத்தை வதைக்கிறது. உறுதியாக இருங்கள்" என்றும் இதுபோல பல நடிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த வகையில் நாமும் அவருடைய மனம் உறுதியாகவும், எதிர்கால வாழ்க்கைக்கு தகுந்தது மாதிரியும் பக்குவப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications