Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலில் விழுந்து தற்கொலை பண்ண போன நடிகை ஸ்ருதிகா அம்மா.. காரணம் நியூஸ் பேப்பரில் வந்த செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ருதிகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இருந்தாலும் அவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான். இந்த நிலையில் ஸ்ருதிகா தன்னுடைய யூடியூப் சேனலில் தன்னுடைய அம்மாவோடு சமையல் செய்து கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா தன்னுடைய காதல் கதையை சொல்லி இருக்கும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

அந்த வகையில் 23 வயதில் தான் ஸ்ருதிகாவின் அப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தன்னைப் பற்றி நியூஸ் பேப்பரில் வந்த செய்தியால் தான் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்வதற்கு முயற்சி செய்தேன் என்றும் அதற்கு பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actress Shruthika Arjun mother is telling her love story

அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஸ்ருதிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் அதுவும் அவர் நினைத்த மாதிரி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் நடிப்பிற்கு டாடா காட்டிவிட்டு படிப்பை நோக்கி சென்று ஸ்ருதிகா சில வருடங்கள் கழித்து அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஸ்ருதிகா தன்னுடைய கணவர் அர்ஜுனை facebook மூலமாகத்தான் சந்தித்து காதலித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகாவிற்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர். இவருடைய கலகலப்பான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. எப்போதும் குழந்தைத்தனமாக இவர் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதற்காகவே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் இந்த நிலையில் இப்போது ஸ்ருதிகா கிச்சன் என்ற youtube சேனல் ஒன்றை துவங்கி அதில் தான் செய்யும் சமையல் கலாட்டா வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அந்த வீடியோவில் தன்னுடைய அம்மாவோடு தான் சமையல் செய்திருக்கும் நிலையில் அம்மாவும் பொண்ணும் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதிகா அம்மா கல்பனா தன்னுடைய காதல் கதையை பற்றி பேசி இருக்கிறார். அதாவது உன்னுடைய காதல் எல்லாம் என்ன பெரிய காதல்? நானும் உங்க அப்பாவும் திருமணம் செய்து கொண்டது அந்த நேரத்தில் எவ்வளவு பரபரப்பு ஏற்படுத்தியது தெரியுமா?

நாங்க கல்யாணம் பண்ணும் போது உங்க அப்பா சங்கருக்கு வயது 19 வயது தான். நான் பஞ்சாபி பொண்ணு எனக்கு அப்போ 23 வயசு அவர விட நான் நான்கு வயது பெரிய பொண்ணு ஆனாலும் எங்களுக்குள் காதல் வந்ததும் இருவர் வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓடி போய் விட்டோம். அப்போ எல்லோரும் எங்களை தேடினார்கள். அந்த நேரத்தில் ஒரு பொண்ணு சங்கரை கிட்நாப் செய்துவிட்டார் என்று பேப்பரில் நியூஸ் வந்தது. அதை பார்த்து நான் பீச்சில் கடலில் விழுந்து தற்கொலை பண்ணிக்க போனேன்.

Actress Shruthika Arjun mother is telling her love story

அப்போ சங்கர்தான் என்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்தார். பிறகு இங்கே வந்து பார்த்தால் அடுத்த பூகம்பம் காத்துக் கொண்டிருந்தது. அதாவது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டு இருந்ததால் போலீசார் என்னிடம் விசாரித்தார்கள். அப்போது நீ அந்த பையனை கடத்திக்கொண்டு போனியா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு சங்கரிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அப்போ உன்னுடைய அப்பாவும் நாங்க லவ் பண்ணி தான் போனோம் என்று சொன்னார். அதற்கு பிறகும் என்னிடம் நீ கிட்னாப் பண்ணுனியா என்று கேட்கிறார்கள் என்று அந்த பழைய பிரச்சனையை ஸ்ருதிகா அம்மா கல்பனா வேடிக்கையாக பேசி இருந்தாலும் இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+