ஹிந்தி பிக்பாஸில் இருந்து ஸ்ருதிஹா வெளியேற்றமா? இப்படி ஒரு காரணமா? ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் போட்டியாளராக இருக்கும் ஸ்ருதிஹா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் அவரை வெளியேற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் தான் பிக் பாஸ் ஹிந்தியில் 18வது சீசன்னும் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் இருந்து முதல் முறையாக தமிழ் நடிகையாக ஸ்ருதிகா கலந்து கொண்டிருக்கிறார். முதல் நாள் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தமிழ் ரசிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானிடம் தமிழ் ரசிகர்களுக்கு தமிழில் வணக்கம் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வைக்க அவரும் தமிழில் வணக்கம் சொல்லி இருந்தார்.

நிகழ்ச்சியின் மேடையில் சல்மான்கான் ஸ்ருதிஹா தமிழில் பிரபலமான சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் என்று அவரைப் பற்றி பெருமையாக பேசும்போது நான் சமையல் நிகழ்ச்சியில் மட்டுமல்ல நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். ஆனால் 4 படமும் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தான் நான் கல்லூரி படிப்பை பார்த்து போய்விட்டேன்.
கல்யாணத்திற்கு பிறகுதான் நான் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றேன் என்று பேசியிருந்தார். இது அந்த நேரத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்றது. ஸ்ருதிஹா குழந்தைத்தனமாக பேசுவது தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் ஹிந்தி ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாவை பற்றி தெரியாததால் இவர் நடிக்கிறார், இவர் பொய்யாக இருக்கிறார் என்று ப்ரோமோவிற்கு கீழே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வந்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய இயல்பான குழந்தைத்தனத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி இவரால் தான் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கிறது, இவரால்தான் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கிறது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஸ்ருதிஹா தொடர்ந்து அங்கு ஹிந்தியில் பேசாமல் அடிக்கடி தமிழில் பேசி பிக்பாஸிடம் சிக்கிக் கொள்கிறார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழியில் நிகழ்ச்சி நடக்கிறதோ அதே மொழியில் தான் அங்கு பேச வேண்டும். அது தான் அந்த ரசிகர்களுக்கு புரியும் என்பது ஒரு விதி இருக்கிறது. பிக் பாஸ் தமிழில் கூட ஒரு போட்டியாளர் தொடர்ச்சியாக மலையாளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு கமல்ஹாசன் வார்னிங் கொடுத்து இருந்தார். அது தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுபோல தொடர்ச்சியாக தமிழில் ஹிந்தி பிக்பாஸில் பேசிக் கொண்டிருப்பதால் ஸ்ருதிஹாவிற்கும் அங்கு வார்னிங் கொடுக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களுக்கு ஸ்ருதிஹா தமிழில் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அது சுவாரசியமாக இருந்தது. அப்போது ரஜினிகாந்தின் டயலாக் கூட அந்த போட்டியாளருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இப்படி இவர் அடிக்கடி தமிழில் பேசிக்கொண்டு இருப்பதால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது பற்றி சல்மான் கான் இந்த வாரம் என்ன சொல்லப் போகிறார் என்றும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இது மேலும் பெரிய பிரச்சினையாக மாறினால் ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்படி வெளியேறினால் அவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications