திடீரென்று திருமண புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான போஸ்ட் போட்ட ஸ்ருதிகா.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நடிகை ஸ்ருதிகா தன்னுடைய கணவரோடு எடுத்த திருமண புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, தாத்தாவைப் போலவே கண்ணழகை கொண்டிருக்கிறார். 15 வயது இருக்கும்போது ஹீரோயினியாக சினிமாவில் ஸ்ருதிகா அறிமுகமானார். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை.

ஆரம்பத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ படத்தில் நடித்த ஸ்ருதிகா அந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகாததால் நடிப்பு நமக்கு இப்போதைக்கு செட்டாகாது என்று அதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே பேஸ்புக் மூலமாக அர்ஜுன் என்பவரை காதலித்து குடும்பத்தார் சம்மதத்தோடு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணம் ஆன ஒரு வருடத்தில் ஒரு மகனையும் பெற்றெடுத்தார். தற்போது நடிப்பை விட்டு விட்டு பிசினஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவரும் அவர், சினிமாவில் களம் இறங்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதுதான் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வான ஸ்ருதிகாவிற்கு பிக் பாஸ் ஹிந்தி 18 ஆவது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு கிடைத்த போது முதலில் ரொம்பவும் யோசித்த ஸ்ருதிகா பிறகு இந்த நிகழ்ச்சியில் நான் நானாக இருக்கப் போகிறேன் அதனால் பயப்பட மாட்டேன் என்று தைரியமாக சென்று இருக்கிறார்.
முதல் முறையாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா தான் அறிமுகமானார். ஆனால் அவர் பைனல் லிஸ்ட் ஆக கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் மிஞ்சியது. நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்ருதிகா மிட்நைட் எவிக்ஷன் செய்யப்பட்டார். இது அவருடைய ரசிகர்களை வருத்தமடைய செய்தது.

முதலில் ஹிந்தி ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் நாட்கள் போகப்போக சப்போர்ட் அதிகரித்தது. ஆனால் அவருடைய எவிக்ஷன் இப்ப வரைக்கும் பேசப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை ஸ்ருதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது அவருக்கு திருமணம் முடிந்து 14 வருடங்கள் முடிந்து விட்டதாம். தன்னுடைய திருமண நாளுக்காக தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய கணவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
அதில் 14 வருட ஒற்றுமை மற்றும் இன்னும் வாழும் காலங்கள் பல உள்ளது. கல்லூரி நாட்களில் இருந்து அவரை எனக்கு தெரியும். அவர் என்னை என்றென்றும் நான் நானாக இருப்பதற்கு சுதந்திரம் கொடுத்தார். என் நல்லது மற்றும் கெட்டதை முழுமையாக பாராட்டினார். எங்கள் பயணத்தின் ஒவ்வொரு நாளையும் மகிமைப்படுத்தினார். இதைவிட அதிகமாக நான் கேட்டிருக்க முடியாது. இப்படி ஒரு கணவர் கிடைக்க பாக்கியம் செய்தவராக உணர்கிறேன் என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா இருக்கும்போதும் தன்னுடைய கணவர் அர்ஜுன் குறித்து தான் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போதும் அர்ஜுன் குறித்து அதிகமாக ஸ்ருதிகா பேசிக் கொண்டே இருந்தார். அதனால் ஸ்ருதிகா எந்த அளவிற்கு பேமஸ் ஆனாரோ அதைவிட அவருடைய கணவர் பேமஸ் ஆகிவிட்டார். இந்த நிலையில் அவர்களுடைய திருமண நாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications