Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகன் செய்த சாதனை.. கண்கலங்கிய நடிகை சிம்ரன்.. அம்மாவுக்கு இதைவிட வேற என்ன வேணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சிம்ரன் தன்னுடைய மகனுக்காக வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் அங்கு சிம்ரனின் மூத்த மகன் படிப்பை முடித்து பட்டம் வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிம்ரன் மகனை பாராட்டி இருக்கிறார். சிம்ரன் மகனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற பட்டியல் ஒவ்வொரு வருஷமும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வருடத்தில் எந்த நடிகையின் படம் ஹிட் கொடுக்கிறதோ அதர்தான் டாப் ஹீரோயினியாக வலம் வருகிறார். இன்று கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் நாளை துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் அம்மா, பாட்டி என்று வயதான கேரக்டரில் கூட நடிப்பது வாடிக்கையாகி வருகிறது.

Simran

சிம்ரன் கம்பேக்

ஆனால் 90ஸ் காலகட்டத்தில் பல படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை சிம்ரன் இப்ப வரைக்கும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அவருக்கு பட்டி தொட்டி எல்லாம் மீண்டும் ரசிகர்களை பெற்று கொடுத்தது. நம்ம சிம்ரன் கம் பேக் என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவருடைய "ஆல்தோட்ட பூபதி" பாடலுக்கு இப்போது அவர் டான்ஸ் ஆடியது கூட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சிம்ரன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி

சிம்ரன் சினிமாவில் தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அவர் 14 வயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "சூப்பர் ஹிட் முக்காப்புலா" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். அந்த நிகழ்ச்சி மூலமாக அவர் பாலிவுட் திரையுலகிலும் கவனிக்கப்பட்டார். அதன் காரணமாக 1995ஆம் ஆண்டு "சனம் ஹர்ஜாய்" என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிம்ரன் நடித்த திரைப்படங்கள்

அதற்கு பிறகு மலையாளத்தில் மம்முட்டியுடன் "இந்திர பிரஸ்தம்" என்ற படத்திலும் கன்னடத்தில் சிவ் ராஜ்குமாருடன் "சிம்ஹடா மாரி" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு தமிழில் 1997 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த "ஒன்ஸ்மோர்" திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்ததாக நேருக்கு நேர், விஐபி போன்ற பல ஹிட் படங்களில் நடிக்க தொடங்கினார்.

Simran

பட்டம் வாங்கிய சிம்ரன் மகன்

பிறகு அவருடைய சினிமா வாழ்க்கை ஏறுமுகம் ஆகத்தான் இருந்தது. புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த சிம்ரன் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் இப்போது படிப்பை முடித்து பட்டம் வாங்கி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை சிம்ரன் பதிவு

குழந்தையாக தன்னுடைய கையில் இருந்த மகன் இன்று பட்டம் வாங்கி விட்டான் என்று மகிழ்ச்சியோடு அந்த வீடியோவை சிம்ரன் பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஒரு அம்மாவாக தன்னுடைய மகனின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்போடு இருக்கும் சிம்ரனின் பதிவு தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+