ஆன்ட்டி கேரக்டரை விட அது ஓகே.. சிம்ரனிடம் திமிரா பேசியது இந்த நடிகையா? குடும்பத்துக்கே போதாத காலம் போல!
சென்னை: நடிகை சிம்ரன் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது தன்னுடைய சக நடிகை ஒருவர் ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக தான் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒரு கமெண்ட் கொடுத்ததற்கு அவர் தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்று மனம் வருந்தி பேசியிருந்தார். அது யாராக இருக்கும் என்று இணையத்தில் அதிகமாக கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது அது பற்றி பார்க்கலாம்.
90ஸ் காலகட்டத்தில் பலருடைய கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன் இப்போதும் சினிமாவில் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவருடைய என்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. அவருடைய டான்ஸ் ஸ்டெப் இப்போதும் பலராலும் ரசிக்கப்படுவது என்பது இந்த படத்திற்கு பிறகு நிரூபணம் ஆகி இருக்கிறது.

பாராட்டை பெறும் நடிப்பு
அந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக இருந்தாலும் அவரை விடவும் ஒரு சில இடத்தில் வந்து சிம்ரன் அதிகமான பாராட்டை பெற்றுவிட்டார். ஆனால் அதைப் பற்றி அலட்டிக்காத திரிஷா சிம்ரன் உடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் பெண் பிரபலங்களை கௌரவிக்கும் விழா ஒன்றில் நடிகை சிம்ரன் கலந்து கொண்டு விருது வாங்கி இருந்தார்.
சிம்ரன் வருத்தம்
அப்போது தன்னோடு நடித்த சக நடிகை தன்னை ஆண்ட்டி ரோலில் நடிப்பதை கிண்டலாக பேசியது குறித்து ஃபீல் பண்ணி பேசுகின்றார். அதில் அவர் பேசும்போது, நான் ஒரு நடிகைக்கு சமீபத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தேன் என டெக்ஸ்ட் பண்ணி இருந்தேன். ஆனால் அவர் எனக்கு ரிப்ளை ஆக ஆன்ட்டி ரோலில் நடிப்பதற்கு இப்படி நடிக்கலாம் என்றார். ஆண்ட்டி ரோலில் நடிப்பதோ, நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதோ எந்த ஒரு கேவலமும் இல்லை. அதற்கு பதிலாக டப்பா ரோலில் நடிக்காமல் இருக்கலாம் என்று நான் கமெண்ட் கொடுத்தேன்" என பதில் கொடுத்து இருக்கிறார்.
டப்பா கேரக்டர் பிரச்சனை
டப்பா என சிம்ரன் சொன்னது ஜோதிகாவாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமாண்ட் கொடுத்து வருகிறார்கள். அதுபோல ஜோதிகா சமீபத்தில் ஹிந்தியில் கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்ததை குறிப்பிட்டு சிம்ரன் இப்படி சொல்லி இருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இன்னும் சில வதந்திகளும் பரவி வருகிறது.
பிரச்சனைக்கு காரணம்
அதாவது நடிகை சிம்ரனும் லைலாவும் சப்தம் என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போதுதான் இந்த பிரச்சனை வெடித்தது விஜய் படத்தில் பிரசாந்த் ஜோடியாக டம்மி கேரக்டரில் லைலா நடித்ததை சிம்ரன் இப்படி சொல்கிறார் என்றும் சிலர் பரப்பி விடுகிறார்கள். ஆனால் சிம்ரன் யார் அந்த நடிகை என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார். அதனால் பல நடிகைகளை ரசிகர்கள் இந்த பிரச்சனையில் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ரசிகர்களின் கருத்துக்கள்
அதே நேரத்தில் ஜோதிகாவை தான் அதிகமான ரசிகர்கள் இதில் முடிச்சு போட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஜோதிகா பேசும் பல விஷயங்கள் ட்ரோல் செய்யப்படுகிறது. ஜோதிகாவும் அவருடைய கணவரும் சூர்யாவும் இணையத்தில் இப்போது அதிகமாக ட்ரோல் செய்யப்படும் நிலையில் சமீபத்தில் சிவக்குமார் ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பற்றி பெருமையாக பேசியது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சிம்ரனை பேசியது கூட ஜோதிகாவாக தான் இருக்கும் என்று சிலர் அடித்துக் கூறி வருகிறார்கள். இதற்கு விரைவில் சிம்ரன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications