டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிய சினேகா.. அவருக்கு பதில் இந்த நடிகை தான்! இதுதான் குத்து
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் நடிகை சினேகா இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை நமீதா களம் இறங்கி இருக்கிறார். சினேகா எதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்று தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஜீ தமிழில் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சரிகமபா ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சரிகமப சீனியர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

நடிகை மும்தாஜ் அறிமுகம்
இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை சினேகா இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். சினேகாவுக்கு பதிலாக இந்த வாரம் நடிகை நமீதா கலந்து கொண்டு இருக்கிறார். "மச்சான்ஸ்" என்ற ஒரே வார்த்தையால் தமிழ் ரசிகர்களை ஏங்க வைத்த நமீதா இந்த வாரம் லோக்கல் குத்து ரவுண்டில் களம் இறங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
விலகிய சினேகா
இந்த வாரத்தில் தர லோக்கல் ரவுண்டு பாடல்களுக்கு போட்டியாளர்கள் ஆட்டம் போடுகின்றனர். அதில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய டான்ஸை பார்த்து இந்த வார நடுவராக வந்திருக்கும் நடிகை நமீதா ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருக்கிறார். அதே நேரத்தில் சினேகாவின் ரசிகர்கள் இந்த வாரம் புன்னகை அரசியை காணவில்லையே அவர்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்றோம் கடந்த அடுத்த வாரம் கண்டிப்பா அவங்க வந்துடனும் என்று அன்பு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.

தர லோக்கல் ரவுண்டு
எந்த ரவுண்டு கொடுத்தாலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி போட்டியாளர்கள் தங்களுடைய பெஸ்ட் கொடுத்து பலரையும் "வாவ்" சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த வாரம் போட்டியாளர்களை மேலும் மெருகேற்றும் வகையில் தர லோக்கல் பாடல்களுக்கு டான்ஸ் ஆட சொல்லி இருக்கும் நிலையில் எல்லோரும் பார்ப்பவர்களையும் குத்தாட போட வைத்திருக்கிறார்கள்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் ப்ரோமோ
இந்த வார எபிசோடின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் எந்த அளவிற்கு மக்களை கவர்ந்திருக்கிறார்களோ அதே போல இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக இருக்கும் மணிமேகலை மற்றும் விஜய்க்கும் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications