சொன்னதை செய்து காட்டிய சினேகா... இப்படி ஒரு அன்பு பரிசா? ஆனந்தக் கண்ணீர் வடித்த பிரபலம்
சென்னை: நடிகை சினேகா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவரிடம் மேடையில் சொன்ன செயலை இப்போது செய்து காட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அதாவது டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர் ஒருவரை நடிகை சினேகா தன்னுடைய வீட்டிற்க்கே வரவழைத்து தன் கையால் சமையல் செய்து அவருக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்திருக்கிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஜீ தமிழில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்திருந்தாலும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவினால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா உள்ளிட்டோர் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரை பார்த்து நடிகை சினேகா ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலேயே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மேடையில் சொன்னதை அப்படியே மறந்து விடாமல் இப்போது அந்த நபருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உணவு பரிமாறி தானே அவருக்கு ஊட்டியும் விட்டு மகிழ்ந்து இருக்கிறார்.
சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தப்படியே ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை சினேகா வெள்ளி திறையில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மகள் மற்றும் தன்னுடைய வீட்டில் நடக்கும் பிறந்த நாள் போன்ற சந்தோஷமான நாட்களில் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களை நேரில் சந்தித்து அவர்களோடு அன்றைய பொழுதை முழுக்க கழித்து வருகிறார்.
சினேகா மட்டும் இயலாதவர்களுக்கு உதவி செய்யாமல் தன்னுடைய குழந்தைகளையும் இதை செய்ய பழக்கப்படுத்தி கொண்டு இருப்பதை பார்த்து பலரும் சினேகாவை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஒரு நபருக்கு தன்னுடைய கையால் சமைத்து சாப்பாடு பரிமாறி விட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications