Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டதும் ச்சீ..னு ஒதுக்கிய “அந்த” நடிகை.. ஆனால், சினேகா செய்த செயலை பாருங்க! கொண்டாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சினேகா தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த திருநங்கைகளுடன் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் சினேகாவின் செயலை பாராட்டி நடிகை நயன்தாராவை திட்டி வருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் சில செயல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. அது போல தான் இன்று காலையில் நடிகை சினேகா செய்த செயல் குறித்து இணையத்தில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 90ஸ் காலகட்டத்தில் புன்னகை அரசியாக சினிமாவில் கலக்கிய சினேகா இப்போ வரைக்கும் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Sneha Thiruvannamalai

சர்ச்சைகள்

அதுபோல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். சினிமா உலகில் பலரும் பொறாமைப்படும் மற்றும் பாராட்டும் வகையில் சினேகா வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினேகா புகழின் உச்சத்தில் இருக்கும்போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண தம்பதி குறித்து அடிக்கடி சர்ச்சைகள் பரவி வரும்.

வதந்திகளுக்கு பதிலடி

இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று ஆனால் அவர்கள் அப்போது தங்களுடைய குடும்ப புகைப்படத்தை போஸ்ட் போட்டு அனைத்து வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்து விடுகிறார்கள். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் பிறந்தநாளை சினேகா மற்றும் பிரசன்னா ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள்.

குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரி

பிறந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதுபோல அனாதை ஆசிரமங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அன்று முழுக்க அவர்களோடு நேரத்தை செலவிடுகிறார்கள். எளியவர்களின் கஷ்டத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு தாங்கள் இதுபோன்று சொல்லிக் கொடுத்திருப்பதாக சினேகா மற்றும் பிரசன்னா இருவருமே போட்டிகளில் பேசியிருக்கிறார்கள்.

கிரிவலம் சென்ற சினேகா

இந்த நிலையில் தான் இன்று சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தன்னுடைய கணவருடன் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலம் பாதையில் இந்திரலிங்கம் அக்கினி லிங்கம் எமலிங்கம் வாயுலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும் திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோவிலிலும் விடிய விடிய கிரிவலம் சென்று இருக்கிறார்.

திருநங்கைகளோடு புகைப்படம்

அப்போது சினேகாவை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களிடம் புன் முகத்தோடு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அப்போது சில திருநங்கைகள் சினேகாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்ல, அவர்கள் அனைவருடமும் சிரித்த முகமாகவே சினேகா போஸ் கொடுத்திருக்கிறார்.

சினேகா செய்த செயல்

அப்போது திருநங்கைகள் சினேகாவின் இடுப்பிலும் தோளிலும் கைவைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதுபோல சினேகாவும் அந்த திருநங்கைகளின் தோளில் சாய்ந்தும் தோளில் கை போட்டும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sneha Thiruvannamalai

பாராட்ட வைத்த செயல்

இதை பார்க்கும் ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தன் பக்கத்தில் ஒரு பெண் புகைப்படம் எடுக்கும் போது லேசாக கையில் தொட்டுவிட்டார் என்பதற்காக ச்சீ என்று அவமானப்படுத்தும் வகையில் முகத்தை சுளித்தபடி விலகிபோன விஷயத்தை குறிப்பிட்டு இது போன்ற நடிகைகள் சினேகாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தி வருகிறார்கள். சினேகா புகழின் உச்சத்தில் இருந்தாலும் எளியவர்களிடம் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நடந்து கொள்கிறார். என்று அவரை பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+