பல வருஷமா சினேகாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு! வெளியே தெரியாது.. ஓபன் ஆக பேசிய பிரசன்னா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சினேகாவிற்கு இருக்கும் பிரச்சனை குறித்து அவருடைய கணவர் சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆக வருகிறது. சினேகாவிற்கு இருக்கும் பிரச்சனை வெளியே தெரியாது ஆனால் அந்தப் பிரச்சினையால் வீட்டில் இருப்பவர்கள்தான் கஷ்டப்படுகிறோம் என்று அந்த பேட்டியில் பிரசன்னா பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை பார்க்கும்போதுதான் பக்கத்து வீட்டு பெண் போன்ற பீல் இருக்கும். அதுபோல ஒருவர்தான் நடிகை சினேகா. 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போ வரைக்கும் முன்னணி நடிகையாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்று பலர் கமாண்டுகளில் கேட்டு வருகிறார்கள்.

Prasanna Sneha

மகிழ்ச்சியான தம்பதி

அதுபோல தமிழ் சினிமாவில் சில நடிகைகள், நடிகர்கள் தான் காதலித்து திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வலம் வருகிறார்கள்.

வதந்திகளுக்கு பதிலடி

இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் இவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதுபோல சினேகா சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக சினேகா சினிமாவில் அறிமுகமானார்‌. அந்த படத்தை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம் எனறு பல திரைப்படங்களில் நடித்து சிரிப்பழகி என்ற பட்டத்தோடு வலம் வருகிறார்.

சினேகாவுக்கு இருக்கும் பிரச்சனை

சினேகா இப்போது சின்னத்திரையிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சினேகா குறித்து அவருடைய கணவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் சினேகா பேசுகையில் தனக்கு ஓசிடி என்ற பிரச்சனை இருப்பதாக கூறி உள்ளார்.

Prasanna Sneha

சுத்தமாக இருக்க வேண்டும்

இதற்கு பிரசன்னா சினேகாவை கலாய்க்கும் விதத்தில் ஆமாம் வீட்டையே மூன்று முறை மாற்றி இருக்காங்க. அப்படின்னா அவங்க எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கோங்க. அவங்க மாத்தாம இருக்கிற ஒரே விஷயம் நான் தான் என்று கிண்டல் செய்திருந்தார். அதற்கு சினேகா எனக்கு எப்போதுமே சுத்தமா இருக்க வேண்டும்.

Prasanna Sneha

அரிதான பிரச்சனை

அதுவும் கிச்சன் கிளீனா இருக்கணும் என்று எதிர்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சினையாக இருந்தாலும் இதற்கு பெருசாக அச்சப்பட தேவையில்லை. இந்த பிரச்சனை இருப்பவர்கள் எல்லாருமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+