நானும் பிரேம்ஜியும் லவ் பண்ணுனோமா? அதுவும் அந்த தயாரிப்பாளர்? நடிகை சோனா ஓபன்
சென்னை: நடிகை சோனா பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதிலும் தன்னுடைய வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஃபிலிமிபிட் தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் நடிகர் பிரேம்ஜியும் சோனாவும் காதலித்தார்கள் என்று பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை சோனா தமிழில் பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அறிமுகமாகி இருந்தாலும் அதற்குப் பிறகு ஷாஜகான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து வடிவேல் உட்பட சில நகைச்சுவை நடிகர்களோடு சேர்ந்து நடித்திருந்தார். அதிலும் இவர் அதிகமான கவர்ச்சியான கேரக்டரில் நடித்து வந்தார்.

குத்து பாட்டுக்கு டான்ஸ்
இந்த நிலையில் தான் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் "மன்னார்குடி கலகலக்க" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அனைவரையும் மிரள வைத்திருந்தார். அந்த பாடல் மூலம் பிரபலம் அடைந்த சோனா அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.
தயாரிப்பாளர் அவதாரம்
இந்த நிலையில் தான் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆனார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்தது. அதுபோல தன்னிடம் இருந்த பணத்தை பலர் ஏமாற்றியதாகவும் அந்த நேரத்தில் சோனா குற்றசாட்டுகள் வைத்திருந்தார்.
நடிப்பை விட்டு விலகல்
அதனாலேயே தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்த சோனா சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த வருடத்தில் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

நடிகை சோனாவின் பயோபிக்
அதற்குப் பிறகுதான் சோனாவின் கதையை தொடர்கதையாக எழுத பிரபல நாளிதழ் முன் வந்திருக்கிறது. பிறகு அந்த கதையை புத்தகமாக வெளியிடலாம் என்று சோனாவும் முடிவெடுத்திருக்கிறார். பிறகு அந்த கதையை ஒரு வெப்சீரிஸாக எடுக்கலாம் என்று தன்னுடைய கதைக்காக பயோபிக்கை சோனா எழுதி இருக்கிறார்.
வதந்திகளுக்கு விளக்கம்
இந்த நிலையில் ஃபிலிமிபீட் தமிழுக்கு பிரத்தியேகமாக அளித்த தகவலில் சினிமா வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து ஜாலியாக பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னை பற்றி பல வதந்திகள் பரவி வந்தது அதே குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சோனா பேசுகையில், என்னை பற்றி சினிமாவில் எத்தனையோ வதந்திகளும் வந்தது.

பிரேம்ஜி நல்ல நண்பன்
ஆனால் அதை எல்லாம் நான் பெருசா எடுத்துக் கொண்டதே கிடையாது. அதுபோல நானும் நடிகர் பிரேம்ஜியும் காதலிப்பதாக செய்திகள் வந்தது. அப்போது தயாரிப்பாளர் சிவா வந்த பிறகுதான் எங்களுக்குள் பிரிவு வந்தது என்று செய்திகள் பரவி வந்தது. அது கொஞ்சம் கூட உண்மை கிடையாது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பிரேம்ஜி சிரித்துவிட்டு எனக்கு போன் செய்து சொன்னான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பிரேம்ஜி எனக்கு நல்ல நண்பன். வயசான குழந்தை அவ்வளவுதான் என்று சோனா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பாலியல் குற்றச்சாட்டு
அதுபோல சினிமாவில் தான் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களை அந்த பேட்டியில் சோனா பகிர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். அது குறித்து அவர் முதலில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு பிறகு அந்த கம்பளைண்டை வாபஸ் வாங்கி இருந்தார். அதற்கு காரணம் தனக்கு நியாயம் கிடைத்துவிட்டது. அதனால் தான் நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கினேன் என்றும் சோனா கூறி இருக்கிறார்.

-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications