வடிவேலு கூட இனி நடிக்கவே மாட்டேன்! பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. அந்த படத்திற்கு பிறகு! சோனா பதில்
சென்னை: நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் வடிவேலுவுடன் குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் நான் வடிவேலுவுடன் நடிக்கவே மாட்டேன் அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் வடிவேலு குறித்து சோனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இதே போல தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிங்கமுத்து வடிவேலு குறித்து பேசி இருந்தார். அப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகு வடிவேலு சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

வடிவேலு பற்றி கருத்து
இந்த நிலையில் இப்போது சோனாவும் வடிவேலு மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். அதாவது சோனா பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தாலும் அதற்குப் பிறகு அவர் அதிகமான திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்திருந்தார்.
சோனா தயாரித்த படம்
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழிகளிலும் நடித்திருந்தார். அதுபோல வடிவேல் உடன் மட்டுமல்லாமல் விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களோடும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆனார்.
அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் சோனாவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

சீரியலில் அறிமுகம்
அதற்குப் பிறகு அவர் எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை நடிக்க மட்டும் செய்திருந்தார். அதிலும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
சோனா இயக்கிய வெப் சீரிஸ்
இந்த நிலையில் சில வருடங்களாக சினிமா மற்றும் சீரியல் என எதிலும் தலை காட்டாமல் இருந்த சோனா இப்போது ஸ்மோக் என்ற வெப் சீரிஸ் இயக்கி, நடித்து இருக்கிறார் இந்த வெப் சீரிஸின் மூலமாக இவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுபோல அந்த வெப் சீரிஸில் தன்னுடைய பயோபிக் கதைதான் என்றும் சோனா கூறி இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை அதில் கதையாக எழுதி இருப்பதாக கூறியிருக்கிறார்.

சோனா பேட்டி
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் சோனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் குறித்து சோனா வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதுபோல நடிகர் வடிவேலு குறித்தும் அவர் பேசி இருக்கிறார். அதில் வடிவேலு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வடிவேலு சார் பத்தி பேசுற அளவுக்கு அவர் ஒர்த் கிடையாது.
வடிவேல் பற்றி சோனா கருத்து
நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுப்பாருங்க. கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். குசேலன் படத்திற்கு பிறகு எனக்கு வடிவேல் சார் கூட 16 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எதற்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

சோனா பிடிவாதம்
எனக்கு கோடி ரூபாய் கொடுத்தா கூட அந்த வாய்ப்பு வேண்டாம். பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேனே தவிர அவர் படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என்று அந்த பேட்டியில் சோனா பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications