Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நடிகர் என் காலை பிடித்து கெஞ்சினாரு.. 6 நடிகைகள் சொன்ன விஷயம்.. ஆடி போயிட்டேன்! நடிகை சோனா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சோனா நடித்து இயக்கிய ஸ்மோக் வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்காக பல பேட்டிகளில் தன்னுடைய வாழ்க்கைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தான் மலையாள சினிமாவில் நடிக்கும் போது ஒரு நடிகர் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிய விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அதனாலேயே இவர்களிடம் பேசுவதற்கே சிலர் பயப்படுவார்கள். அது போன்ற நபர்தான் நடிகை சோனா. ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் பிறகு எதிர்பாராத விதத்தில் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். கவர்ச்சி நடிகையாக பல வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த இவர் அதற்கு பிறகு அந்த பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சி எடுத்து சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.

Sona Rajinikanth

அந்தப் பெயரை மாற்ற முயற்சி

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அபி டெய்லர் சீரியல் மூலமாகத்தான் வில்லியாக சீரியலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு சில மாதங்களிலேயே தான் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை வைத்து ஸ்மோக் என்ற வெப்சீரிஸ் எடுக்க போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இயக்குனர் அவதாரம்

இப்போது அந்த வெப் சீரிஸின் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேட்டிகளில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் மலையாள சினிமாவில் நடந்த சம்பவங்கள் எனக்கு இப்போ நினைத்தால் சிரிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ் நடிகர்கள் இயக்குனர்கள் பலர் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசுவதற்கு ரொம்பவும் தயங்குவார்கள்.

ஒரு சிலர் வேண்டுமென்றால் அட்ஜஸ்மெண்ட்டுக்கு கூப்பிடுவார்கள். ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேற. நான் அங்கு நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நடிகர் என் காலில் விழுந்து கெஞ்சுனாரு. அப்போது அவர் என்னிடம் மட்டும்தான் இப்படி கெஞ்சினாரு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் சில நாட்கள் கழித்த பிறகு நாங்கள் சில நடிகைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு ஈவென்ட்டுக்கு போயிருந்தோம்.

உடைபட்ட உண்மை

அங்கு சும்மா பேசிக்கொண்டிருக்கும்போது இந்த நடிகர் பற்றிய பேச்சு வந்தது. என்னிடம் அவர் நடந்து கொண்டது குறித்து நான் சொன்னேன், அங்கிருந்த ஆறு நடிகைகள் இதே போல தான் எங்களிடமும் அவர் நடந்து கொண்டார், எங்கள் காலிலும் விழுந்து கெஞ்சினார் என்று எனக்கு அதிர்ச்சி கொடுத்தாங்க. இதுபோல பலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேணாலும் செய்யலாம் என்று முதலில் மிரட்டி பார்ப்பார்கள் பிறகு காலில் விழுந்து விடுவார்கள்.

Sona Rajinikanth

எனக்கு அதனாலேயே படங்களில் நடிப்பதற்கு விருப்பம் குறைய தொடங்கியது. கவர்ச்சி நடிகையாக நடித்தால் நாம கூப்பிட்டா வந்துருவாங்க என்று சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நினைக்கிறார்கள். ஒரு சில தயாரிப்பாளர்கள் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். ஆனால் சிலர் தாங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து படம் எடுக்கிறோமோ இல்லையோ ஏதாவது ஒரு நடிகையை கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமிர் வந்தது இப்படித்தான்

அப்படிப்பட்டவர்களை பார்த்தால் எனக்கு தெரிந்து விட்டால் நான் அவர்களிடம் திமிர் ஆகத்தான் நடந்து கொள்வேன். நான் புகை பிடிக்கும் விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால் நான் அவர்கள் முன்பு வேண்டும் என்றே புகையை ஊதி தள்ளுவேன் இல்லையென்றால் என்னுடைய அசிஸ்டன்டிடம் முன்னாடியே சொல்லி வைத்து விட்டு அவர்கள் முன்பு அசிஸ்டன்டை திட்டுவேன். அதனாலேயே அவர்கள் பயந்து ஓடி விடுவார்கள்.

அதுபோல எனக்கு ஒரு மோசமான சம்பவமும் நடந்து இருக்கிறது. நான் எப்போதும் என்னுடைய அசிஸ்டன்ட்டை என்னுடைய பாதுகாப்புக்காக எந்த சூட்டிங் போனாலும் என் அறையில் தான் தங்க சொல்லுவேன். அப்போ சிலர் ஹீரோ மற்றும் புரொடியூசர் சொன்னார் என்று நம்மிடம் வந்து பேசுவார்கள். நாம அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டால் வெளியே கதவை பூட்டி வைத்து விட்டு போய் விடுவார்கள்.

மோசமான சம்பவம்

பிறகு நம்முடைய கதவைத் தட்டி பயமுறுத்துவார்கள். இதனால் பயந்து போய் ஒரு முறை நான் ஒரு ஹோட்டலில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே வந்து அங்கிருந்த குழாயை பிடித்து கீழே இறங்கி பிறகு ரோட்டிற்கு வந்து அங்கு வந்த ஒரு பஸ்ஸில் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இதுபோல மோசமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதுவெல்லாம் என்னுடைய மனதில் ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதைத்தான் நான் என்னுடைய படத்தில் கதையாக சொல்லி இருக்கிறேன் என சோனா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+