Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ஸ்ரீதேவியை ரஜினி பொண்ணு கேட்டாரா? கோடியில் சம்பளம்.. உச்சப்புகழ்.. ஏகப்பட்ட கிசுகிசு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆறுதல் வார்த்தையும், அன்பும்தான், பலரது நம்பிக்கைக்கு காரணமாகிறது. இறுதியில் அது திருமண பந்தத்தில் சென்று முடிவடைகிறது என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி குறித்து கூறும்போது, அவரை சுற்றி வலம்வந்த கிசுகிசுக்கள், ஸ்ரீதேவியின் கணவர், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இவ்வாறு கூறியிருக்கிறார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகை ஸ்ரீதேவி குறித்து பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார்.

Television Sridevi rajinikanth

"ஆயிரக்கணக்கான கிசுகிசுக்கள் ஸ்ரீதேவியை பற்றி எப்போதுமே உண்டு. உதாரணத்துக்கு, சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு பின்னாடிதான், ஸ்ரீதேவியின் வீடு அன்று இருந்தது.. இதற்கு முன்பு, வேறொரு வீட்டில் ஸ்ரீதேவி குடியிருந்தார்.. ஹிந்தி படங்களில் நடித்து உச்சக்கட்ட புகழை ஸ்ரீதேவி அப்போது அடைந்திருந்ததால், மார்வாடி ஒருவர் ஸ்ரீதேவியை நேரில் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

ஆனால், அவரை வீட்டுக்குள் யாரும் உள்ளே விடவில்லையாம்.. காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வாசலில் காத்து கொண்டிருந்தாராம். பிறகு டாக்ஸி டிரைவர் அவரிடம், "தயாரிப்பாளர்" என்று சொன்னால் வீட்டுக்குள் அனுமதிப்பார்கள் என்றாராம்.

வாசலில் காத்திருந்த ரசிகர்

அதன்படியே மறுநாள் காலையில், ஸ்ரீதேவி வீட்டுக்கு வந்த அந்த நபர், தான் ஒரு தயாரிப்பாளர், இந்திப்படத்திற்கு ஸ்ரீதேவியை நடிக்க வைக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். உடனே வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டாராம் அந்த நபர்.. ஸ்ரீதேவியிடம் தற்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்? என்று கேட்டதற்கு 18 லட்சம் என்றாராம்.

அதற்கு அந்த நபர், 22 லட்சம் இப்போதே தருகிறேன், படத்தின் டிஸ்கஷனுக்கு வரவேண்டும் என்று சொல்லி, 22 லட்சம் ரூபாய் தந்தாராம்.. அந்த பணத்தில்தான் சைதாப்பேட்டை கோர்ட் பின்புறம் உள்ள வீட்டை ஸ்ரீதேவி வாங்கியதாக சொல்வார்கள்.

பெண் கேட்டு சென்ற ரஜினி

ஸ்ரீதேவியை ரஜினிகாந்த் விரும்பி, அவரை கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டுள்ளார். அதனால் ஸ்ரீதேவியை பெண் கேட்டு சென்றாராம். ஆனால், தன்னுடைய மகள் படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதாலும், சினிமாவில் நல்ல பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதாலும், ரஜினியின் விருப்பத்தை அவர் ஏற்கவில்லையாம்.

ஒருகட்டத்தில் இந்திப்படங்களில் ஸ்ரீதேவி நடிக்க சென்றதுமே, அனைத்து ஹீரோக்களுடனும் அங்கு நடித்தார். நம்பர் 1 நடிகையாக உச்சத்துக்கு போனார்.. இந்தியில் நடிக்கும்போது ஸ்ரீதேவிக்கு பாதுகாப்பாக இருந்தவர் போனிகபூர்..

உறுதுணையாக நின்றார்

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாதபோதும், போனிகபூர்தான் மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து கொண்டார்.. ஸ்ரீதேவி அம்மா இறந்தபோதும், போனிகபூர்தான் ஸ்ரீதேவிக்கு உறுதுணையாக நின்றார்.. அந்தவகையில் போனிகபூரின் பாதுகாப்பிலேயே கடைசிவரை இருந்தார் ஸ்ரீதேவி.

மூத்த நடிகை விஜயகுமாரி, முதன்முதலில் நடித்த படம் குலதெய்வம். அந்த படத்தின் ஹீரோ எஸ்எஸ்ஆர்.. குடும்பம் சொந்த ஊரில் இருக்க, விஜயகுமாரி மட்டும் தன்னுடைய அம்மாவுடன் சென்னையில்தான் தங்கியிருந்தார்.. ஆனால், அவருக்கு சென்னையில் யாரையுமே தெரியாது.

அன்பும் நம்பிக்கையும்

அந்த நேரத்தில் அவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தபோது, எஸ்எஸ்ஆர்தான், விஜயகுமாரியின் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியிருக்கிறார். ஆனால், அந்த படம் முடியும் நேரத்தில், விஜயகுமாரியின் அம்மா இறந்துவிட்டார்.. அப்போதும், எஸ்எஸ்ஆர்தான் முன்னின்று, அனைத்து இறுதி காரியங்களையும் செய்துள்ளார். இதெல்லாம்தான், எஸ்எஸ்ஆர் மீது விஜயகுமாரிக்கு அன்பும், மரியாதையும் வர காரணமாக இருந்தது.

அதேபோல நடிகை குஷ்பு ஒருமுறை வாழ்க்கையே வெறுத்து, மனசு நொந்து இருந்தார்.. அந்த நேரத்தில்தான் சுந்தர் சி.யின் முறைமாமன் படத்தில் நடித்து கொண்டிருந்தார். அப்போது சுந்தர் சி ஆறுதலான வார்த்தைகளை குஷ்புவுக்கு சொல்லி உள்ளார்.. இந்த ஆறுதல் வார்த்தையும், அன்பும்தான், நம்பிக்கைக்கு காரணமாகிறது. திருமண பந்தத்தில் முடிகிறது" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+