அதே சிவப்பு புடவை.. ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் வீடியோ.. முடிவை மாத்துங்க! புலம்பும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அதிகமாக நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது விஜய் டிவியில் ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் சிவப்பு நிற புடவை கட்டி க்யூட்டாக கலந்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய சில எக்ஸ்பிரஷன் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் ஏன் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். தமிழ் சினிமா ஒரு அழகான கதாநாயகியை இழந்துவிட்டது. இவர் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று எடுத்திருக்கும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அதோடு ஸ்ரீதேவியின் க்யூட்டான பல புகைப்படங்கள் இணையத்தில் பல லைக்குகளை குவித்து வருகிறது

அதே நேரத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் கிடைத்து விட்டனர்.
அதற்குப் பிறகு இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கின்றார். திருமணத்திற்கு பிறகு அதிகமாக நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். அதிலும் அடிக்கடி இவர் மேடைகளில் டான்ஸ் ஆடியும் அங்கு இருக்கும் போட்டியாளர்களை கலாய்த்து கலகலப்பாக இருந்து வருகிறார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் ரியோவோடு சேர்ந்து இவர் செய்யும் குட்டி குட்டி சேட்டைகளையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இதனால் மீண்டும் இவர் எப்போது சினிமாவில் நடிக்க தொடங்குவார் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நேரத்தில் விஜயகுமார் வீட்டு குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி தன்னுடைய குடும்ப புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்கள் என்று பலவற்றையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications