பிரீத்தா அக்கா எனக்காக செய்த செயல்.. அம்மா மஞ்சுளா இறந்த பிறகு நடந்தது இதுதான்! ஸ்ரீதேவி உருக்கம்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பத்தினர்கள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனக்கு பலர் இருந்தாலும் தன்னுடைய அக்கா பிரீத்தா விஜயகுமார் தான் எனக்கு இன்னொரு அம்மா என்று கூறியிருக்கிறார்.
தன்னுடைய அம்மா மஞ்சுளாவின் மறைவுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு அம்மாவின் நினைவு வரக்கூடாது என்பதற்காக எவ்வளவு பாசமாக பார்த்துக் கொண்டார்கள் என்பது பற்றி அதில் ஸ்ரீதேவி விஜயகுமார் பகிர்ந்து இருக்கிறார்.

பழம்பெரும் நடிகரான விஜயகுமார் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த விஜயகுமார் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயகுமார் மட்டுமல்லாமல் அவருடைய மகன் மற்றும் மகளும் நடிகர்களாக இருக்கின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார். அந்த நேரத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். நடிகை மஞ்சுளா வற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீ தேவி மூன்று என மகள்கள் பிறந்தனர்.
பிறகு விஜயகுமார் முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா இருவரோடும் இருவருடன் குழந்தைகளோடும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார். ஆனால் மஞ்சுளாவிற்கு திடீரென உடல்நிலை குறை ஏற்பாட்டு அவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் மஞ்சுளாவின் மகளான ஸ்ரீதேவி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசியிருக்கிறார்.
அதில் தன்னுடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால் அதில் அந்த வேதனையிலிருந்து வெளியே வருவதற்கு என்னுடைய அக்கா எனக்கு ரொம்பவே உறுதுணையாக இருந்தாகவும் கல்யாணத்துக்கு பிறகு நான் கர்ப்பமானதும் அந்த நேரத்தில் அம்மாவுடைய நினைவு எனக்கு அதிகமாக வந்தது.
ஆனால் அம்மா இல்லாமல் நான் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக என்னை பார்த்துக்கொண்டது அக்கா பிரீத்தா தான். பிரீத்தா அக்கா என்னுடைய இன்னொரு அம்மா என்று சொல்லுவேன். அப்பாவையும் எப்போதுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா ஒரு சிறந்த அப்பாவாகவும், பிரண்டாகவும் இருக்கிறார். ஆனால் அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவர் எங்களுக்கு இன்னொரு அம்மா போலத்தான் இருந்து வருகிறார்.
நான் கர்ப்பமாக இருக்கும் போது எல்லோருக்குமே அம்மாவுடைய நினைவு தான் அதிகமாக வரும். ஆனால் அந்த வருத்தம் எனக்கு வராமலேயே என்னுடைய அக்கா பார்த்துக் கொண்டார். அதுபோல என்னுடைய மகள் எனக்கு எங்க அம்மாவின் மறு உருவமாகத்தான் கிடைத்திருக்கிறார் என்று உருக்கமாக அந்த பேட்டியில் ஸ்ரீதேவி பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications