பிக் பாஸ் போக வேண்டாம் என்று தடுத்த கமலின் தோழி..மீறிய சுரேஷ் சக்கரவர்த்தி.. கடைசியில் செய்த சாதனை
சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலின் நெருங்கிய தோழியும், கட்சி நிர்வாகியுமான ஸ்ரீபிரியா தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும், அதையும் மீறி தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான ரம்யா கிருஷ்ணன் வற்புறுத்தலுக்காக கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும்,பிக் பாஸ் தமிழ் சீசனில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை தான் செய்திருப்பதாகவும் சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை யாரும் கஷ்டப்படுத்துவதற்குள் தான் அவர்களை கஷ்டப்படுத்த முயற்சித்ததாகவும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் யாரும் அறியாத முகம்
தாத்தா.. தாத்தா.. என்று சக போட்டியாளர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்த சுரேஷ் சக்கரவர்த்தியை அழகன் பட நடிகராக பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தி இயக்குனர், எழுத்தர், சமையல் கலைஞர், என்று பல திறமைகளை கொண்டவர். 90களில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பட்டையை கிளப்பிய பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் இயக்குனர் சுரேஷ் சக்கரவர்த்தி தான் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிரபலங்களுடன் தொடர்பு
பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான சுரேஷ் சக்கரவர்த்தி ஆஸ்திரேலியாவில் பல கிளைகளுடன் ஹோட்டலை நடத்தி வருகிறார்.தன்னுடைய இளம் வயதிலேயே தாயை இழந்த சுரேஷ் சக்கரவர்த்தி படித்த பள்ளியின் அருகே தான் நடிகை ஸ்ரீ பிரியாவின் வீடு,ஸ்ரீ பிரியாவின் தங்கையும் இவரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் சிறுவயதில் இருந்தே ஸ்ரீ பிரியாவின் குடும்பத்தினருடன் நல்ல நட்புறவிலிருந்து வந்துள்ளார்.

எப்பவும் நான் ஒரே மாதிரி தான்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னை தொடர்பு கொண்ட பொழுது, என்னுடைய கேரக்டருக்கு அந்த நிகழ்ச்சி செட் ஆகாது என்றும், அதனால் பெயர் கெட்டுவிடும் என்றும் நினைத்து ஸ்ரீபிரியா தன்னை அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். நானும் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.ஆனால் தன் நெருங்கிய நண்பர் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினரின் தொடர் வற்புறுத்தலால் மட்டுமே தான் கலந்து கொண்டதாகவும் சொல்லியுள்ளார். நான் எப்பொழுதும் எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய நபர் என்பதால் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததில் எந்த பெரிய வித்தியாசமும், கஷ்டமும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

பிக் பாஸில் யாரும் செய்யாத சாதனை
பொதுவாக வாழ்க்கையில் நம்மை முதுகில் குத்தும் நபர்கள் இருப்பார்கள் ஆனால் மொத்த நபரும் முதுகில் குத்துவது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தெரிந்து, தாம் முன்னேற்பாடாக சென்றதாகவும், பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை யாரும் கஷ்டப்படுத்துவதற்குள் தான் அவர்களை கஷ்டப்படுத்த முயற்சித்ததாகவும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னுடைய பெயர் கெட்டுப் போகவில்லை என்றும், பிக் பாஸ் பிரீமியரில் திரும்பவும் அழைக்கும் அளவிற்கு என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் இருந்ததை எண்ணி தாம் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்து முறை தான் சென்று வந்திருப்பதாகவும் இந்த சாதனையை வேறெந்த போட்டியாளர்களும் செய்யவில்லை என்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications