நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு எளிமையான வளைகாப்பு.. சன் டிவி பிரபலங்கள் அசத்தல்.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீதிகா நடிகர் ஆர்யனை சில மதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் இந்த தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். நேற்று இவர்களுக்கு எளிமையாக வளைகாப்பு நடைபெற்றிருக்கிறது.
ஒரு சில நடிகைகள் முதல் சீரியலிலே பெரிய அளவில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் நாதஸ்வரம் சீரியல் மூலமாக மலர் கேரக்டரில் நடிகை ஸ்ரீதிகா பெரிய அளவில் பெயர் வாங்கினார். இந்த சீரியலில் கோபி மற்றும் மலர் இருவருடைய காதல் காட்சிகள் பலருக்கும் பேவரைட். பிறகு இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடும்.

மலர் இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது அதற்குப் பிறகு அந்தத் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி வந்து மீண்டும் கோபியை மலர் திருமணம் செய்திருப்பார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல மலர் கேரக்டரில் பிரபலமான ஸ்ரீதிகா நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு பல சீரியல் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு நாதஸ்வரம் சீரியல் தான் இப்ப வரைக்கும் அடையாளமாக இருந்து வருகிறது.
அதுபோல ஸ்ரீதிகா மற்றும் அவருடைய கணவர் ஆரியன் இருவரும் மகராசி சீரியலில் ஒன்றாக நடித்து வந்தனர். அப்போது ஆர்யனுக்கு நடிகை நிவேதிதா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அது போல ஸ்ரீருதிகாவும் குடும்பத்தினர் பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஸ்ரீதிகாவிற்கும் அவருடைய முதல் கணவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. பிறகு ஆரியன் மற்றும் ஸ்ரீதிகா இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருவரும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

அப்போது பலரும் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குப் பிறகு திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களுடைய காதலை அறிவித்திருந்தனர். எளிமையாக இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

இந்த தம்பதி கடந்த மாதத்தில் தான் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதிகாவிற்க்கு எளிமையாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது சன் டிவியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஆர்யன் கதாநாயகனாக நடித்துவரும் லட்சுமி சீரியலில் அவரோடு நடிக்கும் நடிகைகள் பலரும் இந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தியிருக்கிறார்கள். அப்போது எடுத்த வீடியோக்களையும் சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications