நடிகை ஸ்ரீவித்யா இப்படி ஒரு பாடலை பாடி இருக்கிறாரா? அதுவும் எந்த படத்தில் தெரியுமா? லீக்கான தகவல்
சென்னை: நடிகை ஸ்ரீவித்யாவின் நடிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா அதற்குப் பிறகு பல நடிகைகளுக்கு அம்மாவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். நடிகையாக பலருக்கும் பரீட்சையமான ஸ்ரீவித்யா ஒரு பாடகியாகவும் இருந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதோடு நடிகை ஸ்ரீவித்யா ஒரு திரைப்படத்தில் குத்து பாடலுக்கு பாடி இருக்கிறார். அது எந்த பாடல் எந்த திரைப்படம் என்ற தகவல்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

எத்தனையோ நடிகைகள் புதியது புதியதாக வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில நடிகைகளை பார்த்தால் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அந்த மாதிரி ஒரு பார்த்ததும் பிடித்துப் போகும் வசீகரம் கொண்ட நடிகை தான் ஸ்ரீ வித்யா. அவர் நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக அமைதியாகவும், பாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஆனாலும் ஸ்ரீவித்யாவால் அதிகமாக ஹீரோயினியாக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறது. அதனாலேயே இவர் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் ரஜினி கமலில் ஆரம்பித்து விஜய் அஜித் என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் இவர் அம்மாவாகவே நடித்து இருந்தார்.
ஆனால் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக மாறி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்ரீவித்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமடைந்திருந்தார். அதுபோல ஸ்ரீவித்யாவின் சிறப்பு அவருடைய கண்கள் தான். தன்னுடைய நடிப்பின் மொத்தத்தையும் கண்களாலேயே அழகாக காட்டி விடுவார். கதையில் தான் என்ன சொல்ல வருகிறாரோ அதை அவருடைய கண்களில் ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியும்.
அதுபோல சிறுவயதில் இருந்து இசையை முறையாக கற்ற ஸ்ரீவித்யாவின் அம்மா ஒரு கர்நாடக பாடகி தான். அதனாலேயே ஸ்ரீவித்யாவும் அழகாக பாடக்கூடியவர் 16 வயதிலேயே ஸ்ரீ வித்யா இசையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் பாடவும் செய்திருக்கிறாராம். அதுபோல ஸ்ரீவித்யா நடிகர் கார்த்திக் நடித்த அமரன் திரைப்படத்தில் வரும் ரிங் ரிங் என்று தொடங்கும் குத்துப் பாடலை ஸ்ரீவித்யா தான் பாடினாராம்.
அந்த பாடலுக்கு கூட டிஸ்கோ சாந்தி தான் டான்ஸ் ஆடி இருப்பார். அது அந்த நேரத்தில் அதிகமாக ரசிக்கப்பட்ட பாடலாகும். ஆனால் இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவை மனப்பூர்வமாக காதலித்ததை சில வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பேசி இருந்தது இப்போது இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஸ்ரீ வித்யாவின் பாடல் திறமையும் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications