நாகர்கோவிலில் சூட்டிங்கில் நடந்த அசம்பாவிதம்! மோகன் இப்படி செய்வார்னு நினைக்கல.. சுஹாசினி பெருமிதம்
சென்னை: கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் நடைபெற்ற போது அங்கு சில ரவுடிகளால் நடிகை சுஹாசினிக்கு பிரச்சனை வந்த போது நடிகர் மோகன் செய்த செயல் குறித்து சுஹாசினி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
80ஸ் சினிமா காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் மோகன் கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருந்தாலும் சினிமாவில் அவர் நடித்த பல திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதிலும் கதாநாயகனாக டாப்பில் இருக்கும் போது அந்த நேரத்தில் வில்லனாகவும் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார்.

அதோடு இவர் நடித்த வெள்ளிவிழா திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த மோகன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மோகன் ஹரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்பட வெளியாகி இருக்கிறது.
அது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சில தினங்களாகவே மோகன் பல youtube சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் நடிகை சுஹாசினியோடு ஒரு பேட்டியில் மோகன் பேசி இருக்கிறார். அதில் சுஹாசினி மற்றும் மோகன் இருவரும் ஒன்றாக நடிக்கும் போது நடந்த பல விஷயங்கள் பற்றியும் அந்த பேட்டியில் பேசி இருக்கின்றனர்.
மோகன் மற்றும் சுஹாசினி இருவரும் இணைந்து நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் அருக்காணி கேரக்டரில் சுஹாசினி நடித்திருப்பார். சுஹாசினி எத்தனையோ கேரக்டரில் நடித்திருந்தாலும் அந்த அருக்காணி கேரக்டர் பலருடைய பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்திற்கான காட்சிகள் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொலிட்டிக்கல் கூட்டம் நடக்கும் வேளையில் அந்த கூட்டத்தில் சுஹாசினி தன்னுடைய செருப்பை தேடுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி நடித்துக் கொண்டிருக்கும் போது உண்மையாகவே சில ரௌடிகள் உள்ளே புகுந்து சுஹாசினியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்களாம்.
அப்போது மோகன் திடீரென கோபத்தில் அந்த ரவுடிகளிடம் சண்டை போட்டு சுஹாசினியை பத்திரமாக காப்பாற்றி இருக்கிறார். இது குறித்து அந்த பேட்டியில் சுஹாசினி பேசும்போது என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த ஒரே ரியல் ஹீரோ நீதான் மோகன். அதுவரை நான் வேறு எந்த நடிகர்களிடமும் அந்த நிஜ ஹீரோயிசத்தை பார்த்ததில்லை. பிளேபாய்க்குள் இப்படி ஒரு ஹீரோ இருப்பதை அன்று தான் நான் பார்த்து வியந்தேன் என்று மோகன் பற்றி சுஹாசினி பெருமையாக பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications