Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடர்ன் உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட சுஜிதா... என்ன இப்படி மாறிட்டாரு...அசந்து போன ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வயசிலேயும் என்ன ஆட்டம் என்று ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கும் சுஜிதாவின் லேட்டஸ்ட் வீடியோஸ் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து அசந்துபோன ரசிகர்கள் குழந்தையை ரசிக்கவா அல்லது சுஜிதாவை ரசிக்கவா என்று திணறிதான் போய் இருக்கின்றார்கள்.

பாண்டியன் ஸ்டோர் தனம் தானா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும்படி கெட்டப்பில் சேஞ்ச் செய்து இருக்கும் சுஜிதாவை பார்த்து அவருடைய ரசிகர்கள் மெய்மறந்து போய் இருக்கிறார்கள், என்று சொன்னால் அது முழுக்க முழுக்க உண்மைதான்.

அது நடிப்பு, இதுதான் ரியல்

அது நடிப்பு, இதுதான் ரியல்

நேற்றைக்கு வரைக்கும் பெரிய வயிறோடு இருந்த சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தை வந்துவிட்டதா!!என்று ரசிகர்கள் காலாய்த்தாலும் இவருடைய க்யூட்டான எக்பிரஸனை பார்த்து கொஞ்ச தவறவில்லை. சீரியலில் இவரை புடவையில் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது நைட்டிரஸில் பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகி விட்டனர். அவ்வளவுதான் வேற ஒன்றும் இல்லை என்று சிலர் ரசிகர்கள் கூலாக கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.யார் எப்படி கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தாலும் சுஜிதாவின் ஆட்டம் தற்போது வேற லெவலில் தான் இருக்கிறது. பலர் வீடியோக்களை போடுகிறேன் என்று அரைகுறை ஆடையோடு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது, இவர் தன்னுடைய மகனோடு பாசத்தை கலந்து அழகை கொட்டிய தருணத்தை பார்த்து சில ரசிகர்களால் கவிதைகளை பொழியாமல் இருக்க முடியவில்லையாம்.

நடிப்பில் பின்னும் தனம் அண்ணி

நடிப்பில் பின்னும் தனம் அண்ணி

சுஜிதா, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார், என்று சொல்வதை விடவும் அந்த கேரக்டராவே ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். அதனால் தான் இவருடைய ரசிகர்களில் பலர் இவரை தனம் அண்ணி என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்த சீரியலில் வீட்டின் மூத்த மருமகளாக, ஒரு அம்மா போலவே தன்னுடைய கணவனின் தம்பிகளை வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களாக குழந்தையே வேண்டாம் என்று இருந்த தனம் தற்போதுதான் கர்ப்பமாக இருக்கிறார். இவருடைய கர்ப்பத்தை தெரிந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கும்போது அந்த வீட்டின் கடைக்குட்டியானா கண்ணன் திடீரென்று திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் ஷாக்காக இருந்துகொண்டிருக்கிறது. இந்த சீரியலின் தனத்தின் வளகாப்பு எபிசோடுகள் வைரலாக பரவி வந்தது. அதற்கு பிறகு தற்போது மீண்டும் கண்ணனின் திருமணம் இந்த சீரியலை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதுவும் கண்ணனை அந்த வீட்டிற்குள் சேர்க்க விடாமல் தனத்தின் கணவர் துரத்தி விட்டாலும் கண்ணனின் மீது இருக்கும் பாசத்தை வெளியே காட்ட முடியாமல் தனம் தவிப்பதை பார்த்து அவருடைய ரசிகர்களும் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர்.

வசீகரிக்கும் முக அழகு

வசீகரிக்கும் முக அழகு

சுஜிதாவிற்கு நடிப்பு எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இவர் குழந்தையாக இருக்கும்போதே, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி விட்டார். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய பெயரைச் சொன்னதுமே டக்கென்று ரசிகர்களின் மனதில் இவருடைய முகம் வந்து விடும். அந்த அளவிற்கு பாப்புலராக இருந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் கொடிகட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறார். முதன்முதலாக கைக்குழந்தையாக இருக்கும்போது முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் மகனாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் இவருடைய அழகு பலருடைய கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த திரைப்படம் வந்து பல வருடங்களை தாண்டி விட்டாலும் அந்த திரைப்படத்தின் இவருடைய க்யூட்டான காட்சிகளை யாராலயும் மறக்க முடியாது.

அடிக்கடி இப்படி பண்ணுங்க

அடிக்கடி இப்படி பண்ணுங்க

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் திரைப்படங்கள் முதல் சீரியல்களில் வரை நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் விளம்பர திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு தன்வின் என்ற ஒரு மகனும் இருக்கிறார். சூட்டிங்கில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் கிடைக்கும் கொஞ்ச நேரங்களிலும் தன்னுடைய மகனுடன் கொஞ்சி விளையாடுவது தான் பெரிய பாக்கியமாக கருதுகிறாராம். அதுதான் எனக்கு பொழுதுபோக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த மாதிரி தான் தற்போது வீட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு க்யூட்டான வீடியோவை எடுத்து இருக்கிறார். அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு இவர் தன்னுடைய மகனை சுற்றிவிட்டு அழகாக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டுகின்றனர். இதுவரைக்கும் இப்படி பார்க்காத ரசிகர்கள் திடீரென்று இவரை இப்படி பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் இதுபோல அடிக்கடி ரீல்ஸ் வீடியோஸ் போடுங்க என்று இவருக்கு அன்பு கட்டளைகளையும் விடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+