Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன பயணத்தில் தான்! அண்ணன் மறைவுக்குப் பிறகு நடிகை சுஜிதா வெளியிட்ட வீடியோ.. நெகிழ வைத்த கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் தனம் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்த நடிகை சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதை சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதாவின் அண்ணன் சூரிய கிரண் சமீபத்தில் தான் உடல்நிலை குறைபாட்டால் காலமாகி இருந்தார். அண்ணனுடைய இறப்பிற்கு பிறகு அது ரிலேட்டட் ஆகவே சுஜிதா அந்த கதையை கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actress Sujitha telling the story on her Instagram page

அந்த வகையில் நடிகை சுஜிதா நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத நிலையிலே நடிப்பை தொடங்கி இருக்கிறார். பிறந்த 45 வது நாளிலிருந்து நடிப்பை தொடங்கிய சுஜிதாவிற்கு முதல் திரைப்படமே நடிகர் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் பாக்யராஜின் மகனாக படம் முழுக்க சுஜிதா குழந்தையாக நடித்திருப்பார்.

அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அவருடைய அண்ணனும் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு குழந்தை பருவ கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். அதுபோல சுஜிதா குழந்தைகளுக்கு பயனுள்ள கதைகள் சொல்லி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று சுஜிதா வெளியிட்ட வீடியோ பலருடைய மனதை கவர்ந்திருக்கிறது. அதில் அவர் பேசுகையில், ஒரு பஸ் போய்க்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வயதான பாட்டி கொஞ்சம் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு சீட்டில் அமர்ந்து இருக்கிறார். அப்போது
அந்த பஸ் ஒரு இடத்தில் நிற்க அங்கு ஒரு இளம் வயது பெண் ஏறுகிறார்.

கையை நிறைய பேக், சூட்கேஸ் போன்ற பொருள்களை வைத்திருக்கிறார். அவர் பஸ்ஸில் ஏறிய அவசரத்தில் உள்ளே வந்து பார்க்க அங்கு அந்த பாட்டி பக்கத்தில் கொஞ்சம் இடம் இருக்க டக்கு என்று அந்த பாட்டியை இடித்த வண்ணம் உட்காருகிறார். அந்த பாட்டி மீது இவருடைய பொருள்கள் இடித்துக் கொண்டிருக்க அந்த பாட்டி எதுவும் சொல்லாமல் லேசாக நகண்டு உட்காருகிறார். பிறகு இந்த இளம் வயது பெண்ணுக்கு நாம செஞ்சது தப்பு என்று தெரிய வருகிறது.

இவ்வளவு பொருள்களை வைத்து அந்த பாட்டி மேல இடிச்சி இருக்கோம். ஆனா அந்த பாட்டி நம்மை ஒரு வார்த்தை கூட பேசாமல் நகண்டு இருக்கிறாரே என்று யோசித்து இருக்கிறார். பிறகு அந்த பாட்டியிடமே பாட்டி நான் உங்க மேல இடிச்சேனே நீங்கள் எதுவுமே சொல்லலையே என்று கேட்க, அதற்கு அந்த பாட்டி இது ஒரு பஸ் பயணம் நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி விடுவேன்.

அந்த கொஞ்ச நேரத்திற்குள் நீ என் மீது இடிச்சிட்டான்னு கோபப்பட்டு உன்னைத் திட்டினால் என்ன ஆகிட போகுது? இது ஒரு சிறிய பயணம் இந்த பயணத்தில் யாரையும் சபிக்கவும் விரும்பவில்லை, யார் மீது கோபத்தை காட்டவும் விரும்பவில்லை, நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கப் போகிறேன். அதற்கு அடுத்த ஸ்டாப்பில் நீ இறங்க போகிறாய் அவ்வளவுதான்... என்று அந்த பாட்டி சொல்லல அந்த பெண்ணிற்கு இது பயணத்திற்கான தத்துவம் மட்டுமல்ல வாழ்க்கைக்கான தத்துவம் என்று புரிய வந்திருக்கிறது..

என அந்த அந்த கதையை சொன்ன சுஜிதா இதுபோல தான் நாம் பயணிக்கும் பயணமும் சிறியது தான். அதில் ஒவ்வொருவருக்கும் நேரம் முடிந்ததும் எல்லோரும் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். அதுவரைக்கும் அடுத்தவர்களை விமர்சித்து அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் நம்முடைய வேலையை கவனித்துக் கொண்டு போவோம் என்று அந்த கதையில் சொல்ல இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+