மறைந்த அண்ணன் சூரிய கிரண் பற்றி நடிகை சுஜிதா உருக்கமான பதிவு.. மன்னிப்பு கேட்ட பிரபலம்
சென்னை: நடிகை சுஜிதா தன்னுடைய அண்ணன் சூரிய கிரண் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அண்ணன் மற்றும் மகனோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சூரிய கிரண் மாஸ்டர் சுரேஷ் என்கிற பெயரில் பல திரைப்படங்களில் ஜூனியர் ஆக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக படிக்காதவன் திரைபடத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சிறு வயது ரஜினியாக மாறிய சூரிய கிரணை யாராலும் மறந்து இருக்க முடியாது.

அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் அசால்ட்டான நடிப்பு நடிகர் ரஜினிகாந்தை அப்படியே பிரதிபலிக்கும். அதுபோல ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் கமல்ஹாசனுக்காகவும் சூரிய கிரண் நடித்திருக்கிறார். அது குறித்து சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் நான் ரஜினிகாந்த் ஸ்டைலை எப்போதுமே பின்பற்றுவதால் கமல் சார் படத்திலும் அதே போல என்னுடைய தலைமுடியை கோரிவிட்டேன்.
அதை பார்த்து கமல் சார் கோபமாகிவிட்டார். அது பற்றி இயக்குனரிடம் நான் இதற்கு தான் இவனை இங்கே போடாதீங்கன்னு சொன்னேன். இவன் அதே ஸ்டைலை இங்கேயும் செய்கிறான் பாருங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நான் நடிக்க வருவதற்கு பல விஷயங்களை கமல் சார் எனக்காக சொல்லிக் கொடுத்தார் என்றும் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
அதுபோல சூரிய கிரண் வளர்ந்த பிறகு கேமராவுக்கு பின்னால் இருக்கவே விரும்பி இருக்கிறார். நடிப்பை விடவும் அவருக்கு இயக்கம் தான் அதிகமாக பிடித்தது. நடிகர் சுமந்த் மற்றும் ஜெனிலியாவை வைத்து சத்தியம் என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருக்கிறார். அதுபோல நாகர்ஜுனா தயாரித்த அந்த படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு சூரிய கிரண் இயக்கிய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும். நம்பிக்கையை இழக்காமல் நடிகை வரலட்சுமி சரத்குமாரை வைத்து அரசி எனும் படத்தை இயக்கி முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சூரிய கிரணுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சென்னையில் இருக்கும் அந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதித்திருக்கிறார்கள்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 11ஆம் தேதி இறந்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சூரிய கிரண் 48 வயதில் இறந்த செய்தி சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதோடு சூரிய கிரணின் தங்கையான சுஜிதா தன்னுடைய அண்ணன் குறித்து பல இன்டர்வியூகளில் பெருமையாக பேசி இருக்கிறார்.
அவர் தன்னுடைய அண்ணனின் மறைவு குறித்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், அண்ணா நிம்மதியாக ஓய்வு எடுங்கள். நீங்கள் என்னுடைய சகோதரன் மட்டுமல்லாமல் என்னுடைய அப்பாவும், ஹீரோவும் நீங்கள்தான். உங்களுடைய திறமை மற்றும் பேச்சுக்காகவே நான் உங்களை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் அன்பு பல வழிகளில் என்னை வந்து அடைந்து இருக்கிறது. அதுபோல மறுபிறப்பு உண்மையாக இருந்தால் உங்கள் கனவுகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் புதியதாக தொடரட்டும் என்று உருக்கமாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த பதிவுக்கு தானும் தன்னுடைய மகனும் தன்னுடைய அண்ணனோடு எடுத்த புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் சுஜிதா வெளியிட்ட பதிவுக்கு பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள். அதுபோல சுஜிதா உடன் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை கம்பம் மீனா என்னை மன்னிக்கவும் சுஜிமா என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார் அதுபோல அந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்த சாய் காயத்ரி ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா உங்களுக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தரட்டும். அதுபோல அண்ணாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார். இப்படியாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சுஜிதாவிற்கு தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications