ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் சீரியலில் சுகன்யா.. ஜோடியாக தலைவாசல் விஜய்.. எந்த சேனல் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யா மற்றும் நடிகர் தலைவாசல் விஜய் இருவரும் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

அதோடு இந்த கூட்டணியில் மேலும் சில சின்னத்திரை பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சுகன்யா மற்றும் தலைவாசல் விஜய் இருவரும் ஜோடியாக நடிக்கும் சீரியல் எந்த சேனலில் வெளியாக போகிறது என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

Actress Sukanya and Actor Thalivasal Vijay New Serial Starring

அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் வெள்ளி திரையில் கொடிக்கட்டி பறந்து விட்டு பிறகு சின்ன திரையில் செகண்ட் இன்னிங்ஸ் கலக்குவார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகை சுகன்யா. சுகன்யா வெள்ளி திரையில் முன்னணி நடிகர்கள் பலரோடும் ஜோடியாக நடித்து இருந்த நிலையில் சின்ன திரையிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதிலும் அவர் நடித்த ஆனந்தம் சீரியல் யாராலும் மறக்க முடியாது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ஆனந்தம் சீரியலும். இந்த சீரியலை பள்ளி, கல்லூரி முடித்து மாலை நேரங்களில் பார்ப்பதற்காக பலர் காத்திருந்த கதையும் உண்டு. அதற்கு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த சுகன்யா சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக சின்னத்திரை வெள்ளித்திரை எதிலுமே தலை காட்டாமல் இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை சுகன்யா மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி பரவியது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுவும் எந்த சீரியலில் வரப்போகிறார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சுகன்யாவோடு நடிகர் தலைவாசல் விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தலைவாசல் விஜய் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். பல நடிகர்களோடு குணசித்திர வேடங்களிலும் முக்கிய கேரக்டர்களும் நடித்து வந்த தலைவாசல் விஜய் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலிலும் குடும்பத்தின் தந்தையாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவரை மீண்டும் சீரியலில் காணவில்லையே என்று ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில் இப்போது இவர் மீண்டும் சீரியலில் நடிக்கிறார் என்பது பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் சுகன்யா மற்றும் தலைவாசல் விஜய் இவர்கள் இருவரும் மீண்டும் சீரியலில் நடிக்கிறார்கள். அதுவும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்றால் எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருக்கும் நிலையில் அவர்கள் எந்த சேனலில் நடிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்தால் அதிர்ச்சி ஆகி விடுவீங்க. ஏன்னா அவங்க நடிக்க போறது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் அப்படி நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான். ஏன்னா இவங்க நடிக்க போறது தூர்தர்ஷன் பொதிகையில் தான் என்ட்ரி கொடுக்கப் போறாங்க. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனனின் அக்கா கேரக்டரில் நடித்து வரும் நடிகை சுவாதிகா சக்தி ஐபிஎஸ் என்ற புது சீரியலில் போலீஸாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த சீரியலில் சுவாதிக்காவுக்கு கதாநாயகனாக சிதம்பரம் நடிக்க இருக்கிறார். அதுபோல சிதம்பரம் புரொடக்ஷன் தான் இந்த சீரியலை தயாரிக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலை டைரக்ட் பண்ணுகிற சுரேஷ் கிருஷ்ணா டைரக்ஷனில் நடிகை சுகன்யா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இப்போது தூர்தர்ஷன் பொதிகையில் சுகன்யா சுரேஷ் கிருஷ்ணனின் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார்.

Actress Sukanya and Actor Thalivasal Vijay New Serial Starring

வரும் ஜனவரி 3ஆம் தேதி இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தூர்தர்ஷன் பொதிகையில் பல சீரியல்கள் புதியதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+