விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகும் நடிகை சுகன்யா.. ஆரம்பமே சண்டை சச்சரவு.. எதிர்பாராத வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடிகை சுகன்யா கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த வார எபிசோட்டில் நடுவராக இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவருக்கும் இடையே செம போட்டி நிலவுகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதில் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு விடுகிறது. அதுபோலதான் ஜோடி ஆர் யூ ரெடி கடந்த வருடத்தில் ஒளிபரப்பானது. அதன் வெற்றியை தொடர்ந்து இந்த வருடத்திலும் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த வாரம் ஸ்பெஷல்
இதில் முதல் சீசனில் நடுவராக இருந்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், சாண்டி மாஸ்டர் இருவரும் தொடர்கிறார்கள். அதுபோல சங்கீதாவிற்கு பதிலாக நடிகை ரம்பா நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வார நிகழ்ச்சியில் ரம்பா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. சாண்டி மாஸ்டர் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் இருவரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.
போட்டிகள் ஆரம்பம்
ஆனால் இந்த வாரத்தில் ஜோடி ப்ரீமியர் லீகேச் ரவுண்டு நடைபெறுகிறது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு போட்டியாக விஜய் டிவியில் JPL என்ற ரவுண்டு தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஒரு பக்கம் ஸ்ரீதேவி அணியினரும் இன்னொரு பக்கத்தில் சாண்டி மாஸ்டர் அணியினரும் மோதுகிறார்கள். அவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஸ்பெஷல் நடுவர்
அதுபோல இந்த வாரம் ஸ்பெஷல் ஹெஸ்ட் ஆக நடிகை சுகன்யா கலந்து கொள்கிறார். அவர்தான் இந்த வார ஸ்பெஷல் நடுவராக இருக்கிறார். இதுக்கு குறித்து சுகன்யா பேசும்போது ஜோடி சூப்பர் லீகில் கலந்து கொள்வதை நினைத்து நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல சாண்டி மாஸ்டர் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் இருவருடைய அணிபோட்டியாளர்களும் டான்ஸ் யுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
ரம்பாவை காணவில்லை
இவர்களுடைய சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் சுகன்யா சின்ன ராசாவே பாடலுக்கு கியூட்டாக டான்ஸ் போட்டு இருக்கிறார். இந்த வாரத்தில் ரம்பாவை காணவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவருடைய ரசிகர்கள் இந்த வாரம் ஸ்பெஷல் நடுவராக வந்திருக்கும் சுகன்யாவை பாராட்ட தவறவில்லை.

நடிகை சுகன்யாவின் திறமைகள்
சுகன்யா 80ஸ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்பவும் இளமையாக இருக்கிறார். அதுவும் இப்போதுள்ள போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அவருடைய டான்ஸ் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகை சுகன்யாவை நடிகையாக தான் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர், ஓவியர், எழுத்தாளர், பாடகி என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.
விவாகரத்து
வெள்ளித் திரையில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த சுகன்யா திடீரென்று சினிமாவை விட்டு விலகி திருமண வாழ்க்கையில் செட்டிலாகி இருந்தார். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு கூட நிலைக்கவில்லை. கணவரை விவாகரத்து செய்து விட்டு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து சுகன்யா பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருந்தார்.
ரசிகர்களின் கமெண்ட்
இப்போது சீரியலிலும் சுகன்யா நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த ஆனந்தம் சீரியல் 90ஸ் கிட்ஸ்கள் பலருடைய ஃபேவரிட். இப்போது கூட பொதிகை சேனலில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரை விஜய் டிவி நிகழ்ச்சியில் பார்க்கும் ரசிகர்கள் இவர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வந்தால் சூப்பராக இருக்கும் என்று கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications