நடிகர் ரஜினிகாந்தோடு ஒருமுறை கூட நடிக்காதது ஏன்..? பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சுகன்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யா தன்னுடைய நடிப்பு வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.

அதில் ரஜினிகாந்துடன் மட்டும் சுகன்யா இதுவரைக்கும் நடிக்காத காரணம் என்பது பற்றியும் தெரிவித்து இருக்கிறார்.

நடிகை சுகன்யா இந்தியன் திரைப்படத்தில் நடித்ததை வைத்து ரசிகர்கள் லேடி கமலஹாசன் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

Actress Sukanya opened her mind Why did you not act with actor Rajinikanth even once

வெள்ளி திரையில் அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் கதாநாயகிகளில் ஒருவராக நடிகை சுகன்யா இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

முதல் திரைப்படம் ஆன புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் தான் இவருடைய நிஜப் பெயர் ஆன ஆர்தி தேவி என்ற பெயரை பாரதிராஜா மாற்றி சுகன்யா என்று இவருக்கு வைத்திருக்கிறார். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் வெற்றி அடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இவர்கிட்டத்திட்ட 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகவே நடித்துக் கொண்டிருந்தார்.

வெள்ளி திரையில் சரத்குமார், சத்யராஜ், ரகுமான், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற பல நடிகர்களோடு நடித்திருந்த சுகன்யா ஒரு முறை கூட நடிகர் ரஜினிகாந்தோடு நடிக்கவில்லை. இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆக முன்னணி நடிகையாக திரைப்படங்களில் ரெஸ்ட்டே இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு எதற்காக என்று தெரியவில்லை. ரஜினியுடன் நடிப்பதற்காக வாய்ப்பு அமையவில்லை.

எல்லோரோடும் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் ரஜினியோடு மட்டும் அது எனக்கு அமையவில்லை. ஒருமுறை நான் ஒரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விட்டு ஏர்போட்டில் காத்திருந்தேன். அப்போது அங்கு கே எஸ் ரவிக்குமாரை சந்தித்தேன். அவர் என்னை திட்டிவிட்டார். நீங்க எதுக்காக ரஜினி படத்துல நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

எப்போ சொன்னேன் யாருமே என்கிட்ட கேட்கவில்லையே என்று நான் கேட்டேன்? இல்லை நீங்க தான் சொல்லி விட்டதாக எனக்கு சொன்னாங்க. நான் உங்களிடம் ரஜினி நடித்த முத்து திரைப்படத்திற்காக கேட்டிருந்தேன். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்ல சுகன்யாவுக்கே அது அதிர்ச்சியாக இருந்ததாம். எனக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.

Actress Sukanya opened her mind Why did you not act with actor Rajinikanth even once

பலமுறை நினைத்திருக்கிறேன் ரஜினியோடு மட்டும் தன்னால் நடிக்க முடியவில்லையே என்று. ஏனென்றால் எனக்கான வாய்ப்பு வந்தும் அது நடக்கவில்லை என்பது பிறகு தான் தெரிந்தது. ஆனால் முத்து திரைப்படத்தில் மீனா நடித்ததை யாராலும் மறக்க முடியாது. மீனாவுடைய நடிப்பு அந்த திரைப்படத்தில் அவ்வளவு எதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும். நான் நடித்திருந்தால் கூட அப்படி இருக்குமா என்று சொல்ல முடியாது அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.

எனக்கு இந்த திரைப்பட வாழ்க்கை பல விஷயங்களை கற்றுத் தந்திருந்தது. நான் எப்போதும் பிசியாக இருந்து கொண்டே இருப்பேன். அப்போது கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ரஜினியோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் நான் நடிக்கவில்லை. ஆனால் பலர் என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+