நடிப்பை விட்டு வேறு துறைக்கு தாவிய நடிகை சுகன்யா.. அப்போ “அந்த” பிரபலத்துக்கு இனி போட்டிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யா சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் தற்போது சினிமா துறையில் வேறு ஒரு அவதாரத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஏற்கனவே நடிகை சுகன்யா பற்றி சில நாட்களாகவே பல வதந்திகள் பரவி வரும் நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாத சுகன்யா தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

Actress Sukanya who has been an actress, is now making her debut as a song writer

அந்த வகையில் இதுவரைக்கும் நடிகையாக இருந்த சுகன்யா இப்போது பாடல் ஆசிரியராக அறிமுகமாக இருக்கிறாராம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை சுகன்யா பரதநாட்டிய கலைஞர் தான். இவர் நடிப்பை விடவும் தனக்கு பரதநாட்டியம் டான்ஸ் தான் ரொம்ப பிடித்தது என்று ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். தான் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்த சுகன்யா முதல் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கமலுடன் மகாநதி, இந்தியன். விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகா பிரபு என பல முன்னணி கதாநாயகர்களோடு அந்த நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் இவரை புகழ வைத்து விட்டார்.

இவருடைய திறமை முடியவில்லை ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு சில ஆல்பம் தொகுப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருக்கும் இருந்த நடிகை சுகன்யா சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட சும்மாவே இருக்க மாட்டாராம். அந்த நேரத்திலும் ஓவியம் வரைவது மியூசிக் கேட்பது டான்ஸ் கிளாஸ்சுக்கு செல்வது புதியதாக தன்னுடைய திறமையை எப்படி மெருகேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்து தான் ஓடிக்கொண்டே இருப்பாராம்.

Actress Sukanya who has been an actress, is now making her debut as a song writer

இந்த நிலையில் சமீபகாலமாக நடிகை சுகன்யா திரைப்படங்களிலும் சீரியல்களிலும் அதிகமாக நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகி இருக்கும் சுகன்யா பற்றி அவர் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தது. அதற்கு சுகன்யா இந்த வயதில் திருமணத்தை செய்து நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? பாட்டி என்று அழைக்குமா? என்று கேள்வி கேட்டு விளக்கமும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை சுகன்யா பற்றி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது டான்ஸ் ஸ்கூல் வைத்திருக்கும் நடிகை சுகன்யா சமீபத்தில் மலையாளத்தில் டி.என்.ஏ என்ற படம் தயாராகிக் கொண்டு வருகிறது. அந்தப் படத்திற்காக முதல் முதலில் தன்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதில் சுகன்யா, கவிதை எழுதி விடலாம் ஆனால் மலையாளத்தில் எப்படி ஒரு பாடலை எழுதுவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில் அந்த படத்தில் ஒரு சில காட்சிகள் தமிழ் வர்ஷனாக இருக்கிறதாம். அந்த இடத்திற்கு ஏற்ப வரிகளை பயன்படுத்தி தான் அதற்கு தகுந்த மாதிரி பாடல் வரிகளை சுகன்யா எழுத இருக்கிறாராம். அதுபோல இந்த பாடல் மட்டும் ஹிட் ஆனால் பெண் கவிஞர் தாமரைக்கு போட்டியாக சுகன்யாவும் வலம் வருவார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+