Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.எஸ்.வியின் மருமகளுக்கு நேர்ந்த கொடுமை..இந்த "சிரிப்பு"க்கு பின்னாடி இத்தனை வலிகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுலக்ஷனா இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனின் மருமகள் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் தான்.

நடிகை சுலக்ஷனா எந்த விஷயத்தையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டாலும் அவருடைய குடும்ப வாழ்க்கை தனக்கு கொடுத்த கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஆளுமையாக இருந்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்ஜிஆர், சிவாஜி படங்கள் எல்லாமே இவருடைய இசையில் தான் பலருடைய மனதையும் கவர்ந்தது. இவர் இசையில் டி.எம்.எஸ், சுசீலா போன்ற பழம்பெறும் பாடகர்கள் தங்கள் குரல் மூலம் அலங்கரித்தனர். இப்போது இருக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு முன்னோடி யாக இப்போதும் எம்.எஸ்.வி தான் இருக்கிறார்.

Actress Sulakshana daughter-in-law of music composer MS Viswanathan, had problems in her marriage

இசையமைப்பாளராகவும், பாடகராகவும், சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வந்த எம்.எஸ்.வியின் பெருமை இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருடைய குடும்பத்திலிருந்து வந்தவர் தான் நடிகை சுலக்ஷனா. இந்த ரகசியம் பலருக்கும் தெரியாததாக தான் இருந்திருக்கும். காரணம் அதை வெளியில் அதிகமாக காட்டிக் கொண்டது கிடையாதாம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சுலக்ஷனா "தூறல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் உடன் இவர் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து ரஜினி, கமல் உடன் இணைந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக "உன்னால் முடியும் தம்பி" படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்திருப்பார். அதேபோல "தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்திலும் முக்கியமான கேரக்டரில் சுலக்ஷனா நடித்திருப்பார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் 14 வயசிலேயே சுலக்ஷனா கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு 16 வயதில் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். அந்த நேரத்தில் எம்.எஸ்.வியின் மூத்த மகன் மீது இவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அவரும் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் இருவருக்கும் முதலில் மோதலில் தொடங்கி பிறகு காதலில் முடிவடைந்து இருக்கிறது.

18 வயதில் திருமணம் செய்த சுலக்ஷனா 22 வயதில் விவாகரத்தும் செய்திருக்கிறார். அதற்குள் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். ஆனால் தன்னுடைய பெற்றோர்களை விட எம்.எஸ்.வி குடும்பத்தில் ரொம்பவே தன்னை பாசமாக பார்த்துக் கொண்டார்கள் என்றும் சுலக்ஷனா கூறி இருக்கிறார். முதலில் சுலக்ஷனாவின் காதல் விஷயம் அவருடைய வீட்டிற்கு தெரிய வந்ததும் இரு வீட்டிலும் எதிர்ப்பு தான் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போது சுலக்ஷனா வீட்டில் எம்.எஸ்.வி நேராக வந்து பெண் கேட்க வேண்டும் என்று சொன்னார்களாம். ஆனால் அவர் எப்படி வருவார் என்று பேட்டியில் சுலக்ஷனாவே கேள்வி எழுப்பி இருக்கிறார். அதனால் தனியாக ஒரு வீட்டை பிடித்து ரிஜிஸ்டர் முன்னாடியே அந்த வீட்டில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம். பிறகு எம்.எஸ்.வி வீட்டில் சுலக்ஷனாவை ஏற்றுக் கொண்டார்களாம்.

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கணவர் தன்னை நடிக்க அனுப்பி இருந்தாலும் விவாகரத்து செய்வதற்காக சில காரணங்கள் இருந்தது. அதை வெளியே சொல்ல முடியாது என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார். அதுபோல தன்னுடைய குழந்தைகளை தனியாகவே வளர்த்து இப்போது நல்லபடியாக படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்துவிட்ட சுலக்ஷனா தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு சில வருடங்களில் அதிலும் ஒரு குறிப்பாக ஒரு சிலர் சில மாதங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, ஒருவரை மாற்றி ஒருவர் பல குற்றச்சாட்டுகளையும் அந்தரங்க விஷயங்களையும் வெளியே கூறிக் கொண்டிருக்கும் நிலையில் சுலக்ஷனா செய்திருக்கும் செயல் இப்போதும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாமே தவிர அவர்களை அசிங்கப்படுத்த தேவையில்லையே என்று சுலக்ஷனா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதுபோல கணவரை பிரிந்த பிறகு அவரிடம் பணம் கேட்டோ, வேறு எந்த தொந்தரவோ செய்யவில்லை என்றும் தன்னுடைய குழந்தைகளை தன்னுடைய செலவில் தான் படிக்க வைத்தேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய குழந்தைகளின் திருமணத்திற்கு அவரை கூப்பிட்டதாகவும், அப்போது அவர் வேறொரு திருமணம் செய்து அந்த குடும்பத்தோடு வந்து ஒரு பக்கத்தில் அவரும் நின்று குழந்தைகளை ஆசீர்வாதம் செய்துவிட்டு போனார். இப்போதும் ஏதாவது பிறந்தநாள் சந்தோஷமான நாள் என்றால் கால் பண்ணி பேசுவார் என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+