ஆட தெரியாதுன்னு சொல்லி கமலிடம் அடி வாங்கினேன்..ரஜினி செய்த செயல்..மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: நடிகை சுலக்ஷனா தன்னுடைய ஆரம்பகால நடிப்பு வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.
கமலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் இப்போது எனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று கூறி அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி எந்த மாதிரி நடந்து கொள்வார் என்று பல தகவல்களை சமீபத்தில் பேட்டியில் கூறி இருக்கிறார். அதை பார்ப்போம்.

பல காலமாக பல நடிகைகள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு தங்களுக்கு அங்கே மார்க்கெட் கொஞ்சம் சரியத் தொடங்கியதும் சின்ன திரையில் கதாநாயகியாகவும், அம்மா கேரக்டர்களும், அக்கா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் சுலக்ஷனா.
துலாபாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 450 மடங்களுக்கு மேலே சுலக்ஷனா நடித்திருக்கிறார். அதுவும் கமல் ரஜினி இருவரோடும் ஜோடி போட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கூறியிருக்கிறார்.
அதில் முதல் முறையாக கமலோடு சேர்ந்து தூங்காதே தம்பி தூங்காதே எனும் திரைப்படத்தில்தான் சுலக்ஷனா நடித்தாராம். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது கமலை பார்த்து வியந்து போய் இருக்கிறாராம். கமலுடைய நடிப்பு மற்றும் டான்ஸ் பார்த்து பயந்து போய் தான் ஒதுங்கியே இருந்திருக்கிறார். அப்போது கமல் ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்ட, அதற்கு எனக்கு இப்படி டான்ஸ் ஆட வராது என்று சுலக்ஷனா கூறினாராம்.
அதற்கு கமல் அய்யோ அப்போ புலியூர் சரோஜாவிடம் நீ நல்லா மாட்டியிருக்க, உன்னை ஒரு வழிப்படுத்தி எடுக்க போறாங்க என்று கூறியிருந்தாராம். பின்பு டான்ஸ் தொடங்கியதும் இவர் பாட்டுக்கு சொல்லிக் கொடுத்தது போலவே ஆடி டேக் முடிந்து விட்டதாம். பிறகு வந்த கமல்ஹாசன் இவருடைய முதுகில் ஒரு அடி வைத்துவிட்டு, நீ என்கிட்ட பொய் தானே சொல்லி இருக்க? உனக்கு டான்ஸ் ஆட தெரியாது என்று சொல்லிட்டு இவ்வளவு அழகா ஆடுதா என்று கேட்டாராம்.

அதற்கு சுலக்ஷனா எனக்கு சினிமாவில் டான்ஸ் ஆட தெரியாது ஆனால் நான் பரதநாட்டியம், வெஸ்டர்ன் எல்லாம் படித்திருக்கிறேன் என்று கூறினாராம். அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது அதற்கு பிறகு கமல் நடிப்பில் ஒவ்வொரு இடத்திலும் தன்னால் எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அதை பெஸ்ட்டாக கொடுத்துக் கொண்டிருப்பார் நான் அதை பார்த்து வியந்து இருக்கிறேன் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பை பார்த்து நான் என்னுடைய நடிப்பிற்கு பயன்படுத்திக் கொண்டேன் என்றும் கூறி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ரஜினியோடும் தம்பிக்கு எந்த ஊரு எந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திலும் கூட ரஜினியை பார்த்து நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அப்போது கேரவன் வசதி அதிகமாக கிடையாது. எந்த வசதிகளும் பெரிய அளவில் இருக்காது. அதனால் ரஜினி இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்வார். அங்கே ஆலமரத்து நிழலில் துண்டை விரித்து அவர் பாட்டுக்கு படுத்து விடுவார், சூட்டிங்கில் பெரிய பிரச்சனை செய்ய மாட்டார். அதை பார்த்து நான் அப்போது வியந்து போய் இருக்கிறேன் என்று ரஜினியை பற்றியும் சுலக்ஷசனா பேசியிருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications