நடிகர் பிரபு, கார்த்திக் எப்போதுமே இப்படித்தான்! வெளியே பலருக்கு தெரியாது.. நடிகை சுலக்ஷனா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து இப்போது சின்னத்திரையில் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுலக்ஷனா தன்னோடு நடித்த நடிகர் கார்த்திக் மற்றும் பிரபு போன்றவர்களின் நிஜ கேரக்டர் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களுக்கு கொடுத்த பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு பல நடிகர்கள் நட்பாகவும் உறுதுணையாகவும் பல உதவிகளை செய்தது குறித்தும் சில நடிகைகள் பேசியிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை சுலகஷனா நடிகர் கார்த்திக் மற்றும் பிரபு குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

sulakshana

நடிகை சுலகஷனா ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு கதாநாயகியாக "தூரல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தம்பிக்கு எந்த ஊரு என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தோடு முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். அதுபோல அந்த நேரத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கார்த்திக் மற்றும் பிரபு போன்ற பல நடிகர்களுக்கும் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அதோடு தன்னைவிட ஒரு வயது மட்டுமே குறைவான நடிகர் பிரசாந்திற்கு அம்மாவாகவும் அந்த நேரத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகரான எம்.எஸ். விஸ்வநாதனின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு மூன்று மகன்கள் இருந்த நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து செய்திருந்தார். பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியிருந்த சுலகஷனா இப்போது பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சுலகஷனா, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் என்றால் அது பிரபு மற்றும் கார்த்திக் என்று சொல்லுவேன். அவர்கள் இருவரோடு நான் நடிக்கும்போது நம்மை யாரும் எந்த குறையும் சொல்ல முடியாது. யாரவது நம்மளை கிண்டல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட உடனே அவர்களுக்கு கார்த்திக் மற்றும் பிரபு இருவருமே பதிலடி கொடுத்து விடுவார்கள்.

அதிலும் பிரபுவோடு நடிக்கும் போது அத்தனை பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக பிரபு சார் வீட்டிற்கு எந்த நடிகையையும் போக முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா பிரபு சார் நம்பிக்கையா என்னை மட்டும் தான் வீட்டிற்கு கூப்பிடுவார். அம்மாவிடம் வந்து பேசிட்டு போ என்று என்னை உரிமையாக சொல்லுவார். இப்போ கூட எந்த இடத்திலும் நான் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த பக்கமாக பிரபு அல்லது கார்த்திக் இருவரில் யார் வந்தால் கூட அவர்கள் நின்று என்னிடம் பேசாமல் போக மாட்டார்கள்.

கார்த்திக் எனக்கு ரொம்ப பெஸ்ட் பிரண்டு அவர் என்னை ஒரு பெண் தோழியா நினைச்சதே கிடையாது. உன் கிட்ட பேசும்போது ஒரு ஆண் நண்பரிடம் பேசும்போது எந்த அளவிற்கு ஒரு ஃபீலிங் வருமோ அது போல தான் வருகிறது என்று சொல்லுவாரு. அதுபோல இயக்குனர்கள் இடம் இவ கூட இனி ஜோடியா நடிக்கிற மாதிரி காட்சிகள் வைக்காதீங்க. இவளை பார்த்தால் எனக்கு ரொமான்ஸ் வராது என்று கூட அவர் சொல்லுவாரு.

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்று பலர் சொல்லினாலும் ஒரு சில நடிகர்கள் நடிகைகளிடம் கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் நடிகை சுலக்ஷனா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+