கமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் பினாயில் விட்டு கழுவனும்.. அவ்ளோ பேசுவாரு..! நடிகை சுமித்ரா ஓபன்
சென்னை: நடிகை சுமித்ரா கமல்ஹாசனோடு கதாநாயகி ஆகவும் நடித்துவிட்டு அவருக்கே அம்மாவாகவும் நடித்திருந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் எப்படி நடந்து கொள்வார் என்று சில விஷயங்களை சுமித்ரா பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகர்களோடு கதாநாயகியாக நடித்துவிட்டு பிறகு சில வருடங்களிலேயே அவர்களுக்கே அம்மாவாகவும் மாமியாராகவும் நடித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சுமித்ரா. இவர் நடிகர் ரஜினி மற்றும் கமல் போன்றவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். பிறகு சில வருடங்களிலேயே அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.

அதிலும் ரஜினிகாந்துடன் கதாநாயகியாக பல படங்களில் நடித்து சுமித்ரா ரஜினி நடித்த பணக்காரன் திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார். பணக்காரன் திரைப்படத்தில் சுமித்ரா நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்ற பாடல் பாடுவது போன்ற காட்சிகள் இருக்கும். இது பெரிய அளவில் ஹிட்டான பாடல். அதுபோல சுமித்ரா கமல்ஹாசன் உடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிறகு சிங்காரவேலன் திரைப்படத்தில் கமலுக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து சுமித்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சுமித்ரா பேசுகையில், சிங்காரவேலன் படத்தில் நான் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருப்பேன், அந்த படத்தில் ஒரு காட்சியில் அம்மா அம்மா என்று ஓடி வர வேண்டும். ஆனால் கமல் சுமி சுமி என்று ஓடி வருவார். அதற்கு நான் அடி வாங்குவ இப்ப நான் உனக்கு அம்மா.. அம்மா என்று கூப்பிடு என்று நான் சொல்லுவேன்.
அதற்கு கமல் கோபப்படுவார். எனக்கு காதலியா நடிச்ச பொண்ணை இப்போ அம்மாவா எப்படி கூப்பிடுறது? ஏன் இப்படி பண்ணுறீங்கன்னு இயக்குனரிடம் கோபப்படுவாரு. அதுபோல கமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அவ்வளவு பேசுவாரு. அதிகமாக ரெட்டை அர்த்த வார்த்தைகள் தான் பேசுவார். அவர் இருக்கிற இடத்தை கண்டிப்பா பினாயில் ஊத்தி கழுவி விடணும் அவ்வளவு பேசுவாரு... ஆனால் அது ஜாலியாக தான் இருக்கும்.
அடுத்தவங்க மனசு புண்படுற மாதிரி பேச மாட்டாரு. எங்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டு பிறகு 16 வயசு ஹீரோயினோடு ரஜினி கமல் எல்லாம் நடிக்கும் போது, பாத்தீங்களா நம்ம கூட நடிச்சிட்டு இப்போ 16 வயசு பொண்ணோட டான்ஸ் ஆடிட்டு இருக்காங்கன்னு நாங்க கிண்டல் பண்ணுவோம் என்று அந்த பேட்டியில் சுமித்ரா பகிர்ந்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
