ஆபாச படத்தில் மட்டுமல்ல.. விஜயகாந்த் நடிச்ச படத்திலும் கஷ்டப்பட்டேன்.. ஸ்வர்ணமால்யா பளிச்
சென்னை: 90ஸ் தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சயமான சுவர்ணமால்யா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சினிமாவை பற்றி தெரியாமல் ஆபாச படம் ஒன்றில் நடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்த கருத்து வைரலாகியுள்ளது. நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் தான் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டதாகவும் அந்த பேட்டியில் ஸ்வர்ணமால்யா பேசி இருக்கிறார்.
பல நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பல வருடங்களுக்கு முன்பே 90ஸ் ஃபேவரிட் தொகுப்பாளரான ஸ்வர்ணமால்யா சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி இருந்தார்.

அதிலும் ஸ்வர்ணமால்யா தொகுத்து வழங்கிய சன் டிவி இளமை புதுமை நிகழ்ச்சி பெரிய அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தது. அந்த நேரத்தில் பல பிரபலங்களை இவர் தான் பேட்டி எடுத்து இருப்பார். சிரித்த முகத்தோடு இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருவது பார்க்கும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்து வந்தது. அதனாலேயே இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் நடிகை ஷாலினியின் அக்காவாக இவர் நடித்து தன்னுடைய நடிப்பால் பலருடைய மனதில் இடத்தை பிடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் ஷாலினிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அப்படியே இந்த அப்பாவித் தனமான நடிப்புக்காக ஸ்வர்ணமால்யாவிற்க்கு ரசிகர்கள் உருவாகி இருந்தனர். இப்படி ஒரு அக்கா நமக்கு கிடைக்க வேண்டும் என்று பல பெண்களும் கூட ஃபீல் பண்ணி வந்தனர்.
அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவருடைய காட்சிகள் எதார்த்தமாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் சினிமாவில் ஜொலிப்பார் என்று நினைத்திருந்த நிலையிலே இவர் ஒரு சில திரைப்படங்களோடு சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு கணவரோடு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார். ஆனாலும் அங்கு அவருடைய கணவரோடு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.

கடைசியாக இவர் விமல் நடிப்பில் நடிகர் மாரிமுத்து தயாரித்த "புலிவால்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் எதிலும் இவர் தலைக்காட்டவில்லை. இந்த நிலையில் சாய் வித் சித்ரா என்ற youtube சேனலில் நடிகர் சித்ரா லக்ஷ்மணனிடம் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் நான் சினிமா துறையில் இயக்குனர் மணிரத்தினத்திடம் ஒரு படத்தில் நடித்து விட்டதால் எல்லோரும் அவர் போல இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் சினிமாவைப் பற்றி தெரியாமல் எடுத்த ஒரு முடிவால் பல்வேறு பிரச்சனைகள் வந்தது. ஒரு படத்தில் என்னிடம் நடிக்க கேட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அந்த படத்தில் நான் பத்து நிமிடங்கள் தான் நடிக்கப் போகிறேன் ஹெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.
ஆனால் அந்த படம் ஆபாச படம் அதில் நடிக்க கூடாது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த படம் டப்பிங் படம் தான் அதற்கான ஒரிஜினல் சிடியை என்னிடம் கொடுத்தார்கள் நானும் விளையாட்டு போக்கில் அதைக் கூட பார்க்கவில்லை. நம்முடைய காட்சிகள் குறைவாக தானே இருக்கிறது சொன்னதை செய்யப் போகிறோம் என்று நினைத்து விட்டேன். அதற்கு பிறகு போட்டோ சூட் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது எனக்கு அது ஆபாச படம் என்று தெரிந்தது. ஆனாலும் இதில் நடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தபோது போட்டோ சூட் முடிந்து விட்டது. அதற்கு பிறகு கூட நான் காண்ட்ராக்ட் கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் அது எனக்கு அந்த நேரத்தில் பெரிதாக தெரியவில்லை. அதற்கு பிறகு நான் ஆபாச படத்தில் நடித்து விட்டேன் என்று சில விமர்சனங்கள் வந்தது. இது நான் தெரியாமல் செய்த தவறு தான் இதைவிட பெரிய தவறு என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த திருமணம் தான்.
அதோடு ஒப்பிடும்போது இதுவெல்லாம் சின்ன விஷயங்கள் தான். அதுபோல நான் அமெரிக்காவில் என்னுடைய கணவரோடு பிரச்சனை ஏற்பட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்த நேரத்தில் தான் நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பிரபுதேவா, விஜயகாந்த் இருப்பார்கள். நான் தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தேன். படம் முழுக்க நான் அழுது கொண்டிருக்கும் கேரக்டர்.
எனக்கு படத்தில் அழுவது கொஞ்சம் கூட பிடிக்காது. அதனால்தான் நான் சீரியலில் இருந்து கூட விலகி இருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் அழுது கொண்டே இருக்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும்.. அழுகை சீன் நடிக்கவே வராது. அது பற்றி நான் இயக்குனரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு இடத்திலாவது நான் சிரிக்கிற மாதிரி காட்சிகள் வைங்க.. ஏற்கனவே நிஜ வாழ்க்கையில் ரொம்ப அழுது கொண்டிருக்கிறேன் என்று கேட்பேன்.
சீரியலிலும் எனக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தது. அதிலும் அதிகமா அழுத மாதிரிதான் எனக்கு காட்சிகள் இருந்தது. அதனால் தான் அதற்குப் பிறகு நடிப்பது குறைத்துக்கொண்டேன். எனக்கு சினிமாவில் சரியான வழிகாட்டுதல்கள் கிடையாது.
என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தாத்தா சினிமாவில் தான் இருந்தார். ஆனால் எனக்கு பெரிதாக எதுவும் சொல்லித் தரவில்லை. அதனால் தான் நான் சில தவறான முடிவுகள் எடுத்து இருந்தேன் என்று அந்த பேட்டியில் நடிகை ஸ்வர்ணமால்யா பேசியிருக்கிறார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications