அரசியல் மாற்றம்.. விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ! சொன்ன காரணம் தான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களின் அரசியல் கருத்துகள் பெரும் பேசுபொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பலரும் ஓபன் ஆக ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், அதற்கு மாறாக சிலர் எதிர்மறையான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும் நடனக் கலைஞருமான சொர்ணமால்யா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் பேசிய கருத்துகள் நேரடியாக யாரையும் குறிப்பிடாமல் இருந்தாலும், "மாற்றம்" குறித்த அவரது நிலைப்பாடு காரணமாக இது விஜயின் அரசியல் பயணத்துக்கு எதிரான கருத்தாக பலர் எடுத்துக் கொண்டு விவாதித்து வருகின்றனர்.

Swarnamalya Vijay Politics Tamil Nadu Elections 2026 TVK

நடிகை சொர்ணமால்யா வீடியோ

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்ட அந்த வீடியோவில் சொர்ணமால்யா, "ஏப்ரல் 14 என்பது தமிழ் புத்தாண்டு மட்டுமல்ல, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட. இது மிகவும் அருமையான நாள்" என்று தொடங்கும் அவர், அந்த நாள் காலை சில இளம் ஆய்வாளர்களுடன் சேர்ந்து தன் வீட்டிற்கு அருகில் உள்ள முதல்வர் படைப்பகத்திற்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

அங்கு இருந்த அமைதியான சூழல், படிக்கவும், சிந்திக்கவும், கலந்துரையாடவும் உதவும் ஒரு திறந்த தளம் தான் உண்மையான சுதந்திரம் என்பதை அவருக்கு உணர்த்தியதாக கூறினார். "சுதந்திரம் என்றால் என்ன?" என்ற கேள்வியை தன்னிடம் தானே எழுப்பிக் கொண்டதாகவும், அதற்கான பதிலாக "நமக்கு எந்த பயமும் இல்லாமல், எந்த கட்டாயமும் இல்லாமல் நம்முடைய உரிமைகளை வெளிப்படுத்திக்கொள்ளும் இடம் தான் சுதந்திரம்" என்று அவர் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அத்தகைய ஒரு சூழல் உருவாகியுள்ளது என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார். "தமிழ்நாட்டில் வாழ்வதால் சுதந்திரம் இன்னும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் மக்கள் எவ்வளவு அழுத்தத்துடன் வாழ்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கே அது இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மரபு மற்றும் பண்பாட்டைப் பற்றியும் அவர் பெருமையாகப் பேசியுள்ளார். "நம் மரபு மாறிக் கொண்டே இருக்க வேண்டும். அதை தடுக்கக்கூடாது" என்று கூறிய அவர், சமூக நீதி நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மாற்றம்

அதன் பின் நேரடியாக தேர்தல் குறித்து பேசும் போது, "இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் வரலாற்றை மீண்டும் எழுதும் நேரம் வருகிறது. இந்த நேரத்தில் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் உண்மையில் மாற்றம் தேவைதானா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அதற்கான தனது பதிலையும் தெளிவாக கூறினார்.

"மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் தான் வரும். நமக்கு இருக்கக்கூடிய முன்னேற்றத்தை பார்த்து மாற்றம் தேவையில்லை, மேலும் முன்னேற்றம் தான் தேவை" என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.

ரசிகர்கள் கருத்து

இந்த கருத்துகள் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஆதரவாக பல சின்னத்திரை மற்றும் திரை பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், சொர்ணமால்யா இவ்வாறு தற்போதைய ஆட்சியை ஆதரிக்கும் வகையில் பேசியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான சைகையாக பார்க்கப்படுகிறது. இதனால், அவர் மறைமுகமாக திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக பலர் கூறி வருகின்றனர்.

சொர்ணமால்யா பயோகிராபி

சொர்ணமால்யா பற்றி சொல்லப்போனால், அவர் ஒரு திறமையான பாரதநாட்டியம் நடனக் கலைஞர் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். 90களில் இருந்து தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருபவராகவும் அறியப்படுகிறார்.

மொத்தத்தில், தேர்தல் சூடு அதிகரித்து வரும் இந்த நேரத்தில், பிரபலங்களின் ஒவ்வொரு கருத்தும் அரசியல் அர்த்தம் பெற்று விவாதமாக மாறி வருகிறது. அந்த வரிசையில் சொர்ணமால்யாவின் இந்த வீடியோவும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. வரும் நாட்களில் இதற்கு மேலும் என்ன பதில்கள் வருகிறது, இது வாக்காளர்களின் மனநிலையை எப்படி பாதிக்கும் என்பதையே அனைவரும் கவனித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+