சொர்ணமால்யாவுக்கு வந்த சோதனை.. நடிகையின் சென்னை சைதாப்பேட்டை வீட்டில் குபுகுபுனு நுழைந்த போலீஸ்! ஏன்
சென்னை: 90களின் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் சொர்ணமால்யா.. மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரும்கூட.. டிவியில் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சினிமாவிலும் நடித்தவர்.. இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சொர்ணமால்யா வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை தந்துவிட்டது.
சன் டிவியில் அன்றைய காலத்தில் வெளியான, "இளமை புதுமை" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்தவர் சொர்ணமால்யா.. படபடவென சொர்ணமால்யா பேசும் பேச்சுக்கு அன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்..

இதற்கு பிறகு, அலைபாயுதே படத்தில் ஷாலினியின் சகோதரியாக நடித்து, சினிமாவிலும் காலடி வைத்தார்.. ஆனால், பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு சொர்ணமால்யாவுக்கு குறைவாக வந்தது..
விஜயகாந்த் எங்கள் அண்ணா
விஜயகாந்த்துடன், எங்கள் அண்ணா படத்தில் சொர்ணமால்யாவின் பரிதாப நடிப்பு, ரசிகர்களின் பாராட்டை பெற்றது என்றாலும், பெரிய அளவுக்கு சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி, திருமணமாகி வெளிநாடு சென்றார்.
பிறகு சில வருடங்களிலேயே கணவன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்றார். அதற்கு பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடியும், பெரிதாக கிடைக்கவில்லை. "புலிவால்" என்ற படத்தில்தான் இவர் கடைசியாக நடித்திருந்தார்.
இதற்கு பிறகு மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் சேனலுக்கு சொர்ணமால்யா தந்திருந்த பேட்டி இணையத்தில் வைரலானது..
கெஸ்ட் ரோல்
அதில், "ஒரு படத்தில் 10 நிமிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டார்கள். ஆனால், அது ஆபாச படம் என்றுகூட எனக்கு தெரியாது.. ஆபாச படத்தில் நான் நடித்துவிட்டதாக என்மீது நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.. சினிமாவை பற்றின புரிதல் இல்லாததால், அந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன்" என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இன்று அதிகாலை ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில் சைதாப்பேட்டை நந்தனம் விரிவாக்கத்தில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர் மாலினி கணேஷ் (நடிகை சொர்ணமால்யாவின் தாயார்) வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது நேற்றைய தினம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி விட்டது.
சென்னை சைதாப்பேட்டை வீடு
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் போலீசார் கிளம்பி சென்று, அதிரடி சோதனையையும் மேற்கொண்டனர்..
இறுதியில், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன் பிறகு சொர்ணமால்யா வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதுமட்டுமல்ல, சைதாப்பேட்டை போலீசார் நந்தனம் விரிவாக்க பகுதிக்கு சென்று விசாரித்தபோது, சொர்ணமால்யா குடும்பத்தினர் 3 வருடங்களுக்கு முன்பே, வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ஆழ்வார்பேட்டை, செயின்ட் மேரிஸ் சாலையில் இன்னொரு வீட்டில் குடியேறியிருப்பது தெரிய வந்தது.
நடிகை வீட்டில் பரபரப்பு
எனினும், இந்த மிரட்டலை விடுத்தது யார் என்று தெரியவில்லை.. எனவே, விடுத்த மர்ம ஆசாமியை தேடும் வேட்டை நடப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படித்தான் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு என தொடர்ந்து பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications