விஜய் பட நடிகையை சூட்டிங்கில் கன்னத்தில் அறைந்த எஸ்ஏ சந்திரசேகர்! மனைவி ஷோபா சொன்ன வார்த்தை!
சென்னை: திரையுலகில் இளைய தளபதியாக கலக்கி கொண்டிருக்கும் விஜய்யின் ஆரம்ப கால வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி கிரண். பல ஆண்டுகளுக்கு முன்பு, தன் முதல் திரைப்பட அனுபவம் குறித்து இவர் தற்போது பகிர்ந்துள்ள ஒரு தகவல், திரையுலக ரசிகர்களைச் சுவாரஸ்யப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த ஓர் அதிர்ச்சியான அனுபவத்தை, பல வருடங்கள் கழித்து அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

விஜய்யின் ஹீரோயின் ஆன பள்ளி மாணவி
நடிகை ஸ்வாதி, 1995ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'தேவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்க, விஜய்யுடன் சிவகுமார், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 'தேவா' திரைப்படம்தான், விஜய்யின் ஆரம்பகால கமர்ஷியல் வெற்றிகளில் முக்கியமான ஒன்றாகும்.
ஸ்வாதி, அப்போது 8வது மற்றும் 9வது வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது, மாடலிங் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, எஸ்.ஏ. சந்திரசேகர் ஸ்வாதியின் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்துள்ளார். முதன்முதலில் போனை எடுத்த ஸ்வாதியின் அம்மா, தன் மகள் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறி போனை கட் பண்ணி வைத்து விட்டாராம். ஆனாலும், எஸ்.ஏ.சி.யின் ஆபீஸிலிருந்து தொடர்ந்து போன் செய்து கேட்டிருக்கிறார்கள்.
அப்பாவின் நம்பிக்கை
விடாமல் போன் வருவதைப் பார்த்த ஸ்வாதியின் அப்பா, "உனக்கு தான் தமிழ் தெரியுமே. சும்மா போயிட்டு வாங்க. படத்துக்கு முதலில் அவங்க நம் மகளைத் தேர்வு செய்யணும்ல. ஸ்வாதியை எஸ்.ஏ.சந்திரசேகர் நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார்" என்று நினைத்திருக்கிறார்.
இந்த நிலையில், பள்ளிக்குக் கோடை விடுமுறை வரவே, மகளை அழைத்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் ஸ்வாதியின் அம்மா. எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டில் வைத்து போட்டோஷூட் நடந்தபோது, ஒருவர் வந்து ஸ்வாதியின் மீது கைபோட, அவர் யாரென்று திரும்பிப் பார்த்தபோது, அங்கு நடிகர் விஜய் நின்றிருக்கிறார். போட்டோஷூட் முடிந்த பிறகு, "நீங்க தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறீர்கள்" என்று ஸ்வாதியிடம் கூறியிருக்கிறார்கள். அப்போது உச்சத்தில் இருந்த ஒரு நடிகை நடிப்பதாக இருந்து, அது நடக்காமல் போகவே, ஸ்வாதிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஸ்கூல் லீவு என்பதால், 'தேவா' படத்தில் நடிக்கட்டும் என்று அப்பா சம்மதம் சொல்லியிருக்கிறார்.
'தேவா'வைத் தொடர்ந்து, 'வசந்தவாசல்' மற்றும் 'செல்வா' ஆகிய படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக ஸ்வாதி நடித்தார். விஜய்யைத் தாண்டி, அஜித்குமாருக்கும் ஜோடியாக நடித்த இவர், தற்போது 'பாரிஜாதம்' சீரியலில் நடித்து வருகிறார்.
விஜய்யின் அம்மாவின் ஆறுதல்
தேவா படத்தில் நடித்தபோது எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் அடி வாங்கிய சம்பவம் குறித்து ஸ்வாதி தற்போது பேசியுள்ளார். அந்தச் சம்பவம் குறித்து ஸ்வாதி பேசுகையில், "பள்ளிப் பிள்ளை என்பதால், அது டீச்சரிடம் இருந்து அடி வாங்கியது போல நினைத்தேன்" என்று கூறினார். கதைப்படி, அப்பா வேடத்தில் நடித்த சிவகுமார் சார் அடித்ததும், மகள் ஸ்வாதி அழ வேண்டும். ஆனால், சிவகுமார், "நடிப்பு தான்" என்று நிஜமாக அறையாமல் லேசாகத் தட்டியிருக்கிறார். ஸ்கூல் கேர்ளான ஸ்வாதிக்கு அழுகை வரவில்லை. தொடர்ந்து ரீ-டேக் போய்க் கொண்டே இருந்திருக்கிறது.
ஸ்வாதிக்குக் கண்ணீர் வராததைக் கண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், விறுவிறுவென்று வந்து ஸ்வாதியின் கன்னத்தை சேர்த்து, ஓங்கி ஒரு அறை வைத்திருக்கிறார். அந்த வலியால் ஸ்வாதி அழுதுவிட, டேக் ஓகே ஆகிவிட்டது!
எஸ்.ஏ.சந்திரசேகர் அடித்ததில், அவருடைய கைவிரல் ஸ்வாதியின் கன்னத்தில் அப்படியே பதிந்துவிட்டதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரின் முன்பும் டைரக்டரிடம் அடி வாங்கிய பள்ளி மாணவி ஸ்வாதிக்கு அது அவமானமாக ஆகிவிட்டதாம். அதனால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் கவனித்த விஜய்யின் அம்மா ஷோபா தான், தன் கணவரிடம் போய் பேசியிருக்கிறார். "சின்னப் பொண்ணு, புதுப் பொண்ணு, அதை போய் அடிச்சுட்டீங்களேனு" ஷோபா சொல்ல, அதைக் கேட்டுவிட்டு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்வாதியைச் சமாதானம் செய்திருக்கிறார். எஸ்.ஏ.சிக்கு ஸ்பாட்டில் எப்படி கோபம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ஸ்வாதி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பழைய நினைவுகள், இப்போது ஒரு வேடிக்கையான அனுபவமாக மாறியுள்ளது.
-
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்!












Click it and Unblock the Notifications