விஜய்யுடன் நடித்த சுறா மாதிரி இனி நடிக்கவே மாட்டேன்.. ஏனென்றால், நடிகை தமன்னா ஓபனாக பேசிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தமன்னா சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் விஜய்யுடன் நடித்த சுறா படம் குறித்து பேசி இருப்பது மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஒரு நடிகையாக தான் நடித்த படங்களை பற்றி வெளிப்படையாக பேசும்போது சுறா படத்தில் சில காட்சிகளில் தனது நடிப்பு சரியாக இல்லை என்றும், இது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் ஓபனாகவே சொல்லி இருக்கிறார்.

பொதுவாக நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களை பற்றி பேசும்போது வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் பட குழுவை விட்டுக் கொடுக்காமல் பேசுவது தான் வழக்கம். ஆனால் தமன்னா இந்த விஷயத்தில் கொஞ்சம் வெளிப்படையாகவே தனது கருத்தை சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் படத்தையே முழுமையாக மோசம் என்று அவர் சொல்லவில்லை, சில காட்சிகளில் தனக்கு திருப்தி தரவில்லை என்பதைத்தான் சொல்லி இருக்கிறார்.

Tamannaah Vijay Sura Tamil Cinema

நடிகை தமன்னா பேட்டி

அந்த பேட்டியில் தமன்னாவிடம், நீங்கள் இதுவரை நடித்த படங்களில் மீண்டும் நடிக்க விரும்பாத படம் எது என்று கேள்விக்கு தமன்னா சுறா படத்தை வெளியே குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது தமன்னா பேசுகையில், "அந்த படத்தில் சில காட்சிகளில் எனது நடிப்பு மோசமாக இருந்ததாக நினைக்கிறேன். பாடல்கள் மட்டும் நன்றாக அமைந்திருந்தது. படத்தின் கதை மற்றும் நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை" என்று அவர் பகிர்ந்திருக்கிறார்.

விஜய்யின் 50வது படம்

மேலும், "அப்போது படப்பிடிப்பிலேயே படம் எதிர்பார்த்தபடி வராது என்ற உணர்வு எனக்கு இருந்தது. சில படங்களில் அப்படிப்பட்ட சூழல் இருந்தாலும் ஏற்கனவே கொடுத்திருக்கும் வாக்குறுதி மற்றும் பொறுப்புக்காக படத்தை முடிக்க வேண்டி இருக்கும். அதனால்தான் வேறு வழி இல்லாமல் அந்த படத்தில் நடித்தேன்" என்று தமன்னா பேசியிருந்தார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான சுறா விஜய்யின் 50வது திரைப்படம். எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். வடிவேலுவும் காமெடி கேரக்டரில் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். மணி ஷர்மா இசையமைத்திருந்தார்.

Tamannaah Vijay Sura Tamil Cinema

நெகட்டிவ் விமர்சனம்

மீனவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய நிலத்தை பறிக்க முயலும் அரசியல் பின்னணி என இந்த படத்தின் கதை இருந்தது. விஜயின் 50வது படம் என்பதால் வெளியீட்டுக்கு முன்பே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சர்களிடமிருந்து கலவையாகவும், எதிர்மறையான விமர்சனங்களும் வந்தது. குறிப்பாக படத்தை பார்த்த பலரும் இது வழக்கமான மசாலா படம் மாதிரி தான் இருக்கு, புதியதாக கதையில் எதுவும் இல்லை என்று பலரும் சொல்லி வந்தனர்.

Tamannaah Vijay Sura Tamil Cinema

சுறா பட சர்ச்சை

சுறா படத்தை பற்றி இப்போது பேசினாலும் அதில் இடம்பெற்ற சில பாடல்களையும், விஜய் வடிவேலு கூட்டணியில் காமெடி காட்சிகளையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். படத்தின் கதையைப் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் தொலைக்காட்சியில் அந்த பட காமெடி காட்சிகள் ஒளிபரப்பாகும் போது ரசித்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். திரையரங்க வசூல் என்று வரும்போது சுறாவுக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது வெளியான செய்திகளின்படி திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விஜய்யிடம் இழப்பீடு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

இப்படி விஜய்யின் 50வது படம் என்று பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான சுரா தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் பாடல்கள், காமெடி காட்சிகள் என்று சில விஷயங்கள் ரசிகர்களிடம் என்றும் நினைவில் இருக்கின்றன. இப்போது அந்த படத்தில் நடித்த தமன்னாவே தனது நடிப்பு குறித்து அதிருப்தியை வெளிப்படையாக பகிர்ந்து இருப்பதால் சுறா படம் பற்றிய பழைய விவாதம் மீண்டும் கிளம்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+