கேரவனில் நடந்த சம்பவம்.. கதறி அழ கூட முடியவில்லை..! மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா
சென்னை: முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசும்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் கேரவனில் தனக்கு நடந்த பிரச்சனையால் தான் பட்ட கஷ்டம் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகை தமன்னாவுக்கு அறிமுகமே தேவையில்லை. பையா திரைப்படத்தில் "அடடா மழைடா அடை மழைடா" என்று இளைஞர்களின் மனதில் சாரலையும் வெப்பத்தையும் கொடுத்த தமன்னாவிற்கு தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமன்னா முதல்முறையாக தெலுங்கு படத்தில் முலமாக சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கல்லூரி படத்திலும் அவருடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார். அதை தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு ஹிட் கொடுத்தது.
விஜய், சூர்யா, கார்த்தி உட்பட முன்னணி நடிகர்கள் பலரோடும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் "காவாலா" பாடலுக்கு நடனமாடியது இப்போதும் பலராலும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரண்மனை திரைப்படத்தில் பேயாகவும் மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில் ஹிந்தியில் ஸ்ட்ரீட் டு படத்தில் ஆர்ச் கீர் ராக் என்ற பாடலிலும் டான்ஸ் ஆடி இருந்தார். இந்த நிலையில் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசும் போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் கேரவனில் இருந்தபோது மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். நான் எதிர்பார்க்காத சம்பவத்தால் வேதனை அடைந்தேன்.

அந்த நேரத்தில் என்னுடைய கண்கள் குளமானது. அதே நேரத்தில் நான் சூட்டிங்கிற்கு தயாராகி மேக்கப் உடன் மஸ்காரா போட்டு இருந்ததால் அந்த சமயத்தில் என்னால் அழ கூட முடியவில்லை. அப்போது எந்த சூழ்நிலையிலும் நாம் மனம் தளரக்கூடாது என்று கண்ணாடியில் என்னை பார்த்து நானே சொல்லிக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.
இது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள், தொந்தரவுகள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை தமன்னா தனக்கு கேரவனில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு எந்த படத்திற்கான சூட்டிங் போது தனக்கு இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது என்று தமன்னா குறிப்பிடவில்லையே அதையும் தெளிவாக சொன்னால்தான் நல்லது என்று பலரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் தற்போதைய சூழ்நிலையில் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு தனித்தனி கேரவன் இருக்கும் நேரத்தில் இப்படி பிரச்சனைகள் நடக்கிறது என்றால் தயாரிப்பாளர்கள் சொல்வது போல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஒரே கேரவன் கொடுக்க வேண்டும் என்றால் இது மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications