பிரபல நடிகையின் மோசமான நிலை.. காப்பாத்துங்க காப்பாத்துங்க.. வீட்டில் ஒரே சத்தம்.. கனகா போல: பிரபலம்
சென்னை: விஷாலின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார்.. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க இரண்டு வீடியோவை பகிர்ந்திருந்தார்.. அதில், சொந்தவீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாகவும், நான்கைந்து வருடமாக சித்ரவதைக்கு ஆளாகியிருப்பதாகவும் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.. இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு,
"தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருப்பார்.. மீ டூ சர்ச்சை வந்தபோது, தனுஸ்ரீ தத்தா, பாலிவுட் நடிகர் நானே படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.. அது தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. ஆனால், நானே படேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.. அதனால் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

தமிழகத்தில், பாலியல் குற்றச்சாட்டை சின்மயி கிளப்பவும்தான், அவருக்கு 7 வருடங்களாக பாடவும், டப்பிங் செய்யவும் வாய்ப்பு தரப்படவில்லை.. அந்த அளவுக்கு அவரை ஒதுக்கி வைத்திருந்தனர்.. தக் லைஃப் பட பாட்டை சின்மயி மேடையில் பாடியபோதுதான், சினிமாவில் அவர் பாடக்கூடாது என்று மறைமுகமான தடை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
தனுஸ்ரீ தத்தாவுக்கு என்னாச்சு
அதுபோல, தனுஸ்ரீ தத்தாவுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது..
துனுஸ்ரீ., ஒரு வீட்டில் தனியாக அவர் இருப்பது போல தெரிகிறது. இதுபோன்றவர்கள் குடும்பத்தினர் உட்பட யாருடனும் ஒன்றாக சேர்ந்து வாழ மாட்டார்கள்.. தனிமையை விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள்...
தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், "தனியாக இருக்கும் என்னை, பல தொந்தரவு செய்கிறார்கள், தண்ணி கேன் போடும் பையன், யாரோ காலிங் பெல் அடிக்கிறார்கள், வீட்டிற்குள் வித்தியாசமான சத்தம் தந்து தொந்தரவு செய்கிறார்கள், எனக்கு வரும் பார்சலை, யாராவது எடுத்து சென்றுவிடுவார்கள் என்றெல்லாம் முன்னுக்குபின் முரணாக அழுது சொல்லியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் உண்மையா என்றும் தெரியவில்லை.
மன அழுத்தம் - தனிமை
பரபரப்பாக நடித்துவிட்டு, பேர், புகழ் சம்பாதித்துவிட்டு, ஒருகட்டத்தில் இவை எல்லாமே தன்னை விட்டு சென்றால், யாராக இருந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.. பேர், புகழை இழந்து, அவைகளை மீண்டும் சம்பாதித்து வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் பலர் உண்டு.. ஆனால், அப்படியான உறுதியான மனநிலை பலருக்கும் வருபவதில்லை.. பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார்கள்.
தனிமையில் இருக்கும்போது பலவித சிக்கல்கள் வருகிறதென்றால், காவல்துறைக்கு சென்று புகார் தர வேண்டும்.. காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று சத்தம் போடும்போது, அங்குள்ளவர்கள், சாலையில் செல்வோர், அக்கம் பக்கத்தினர், காவல்துறையினர், அந்த நடிகைக்கு உதவி செய்திருக்க மாட்டார்களா?
நடிகர் ஸ்ரீ பாதிப்பு
கடத்தி கொண்டுபோய் வைத்திருந்தால், அல்லது வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற இடத்தில் சிக்கி கொண்டால் காப்பாற்றலாம்.. ஆனால், தன்னுடைய வீட்டிலேயே இருப்பவரை எப்படி காப்பாற்றுவது?
உடம்பு சரியில்லை, இனிமேல்தான் புகார் தர வேண்டும் என்கிறார்.. நானா படேகர் மீது பாலியல் புகார் சொன்னதிலிருந்துதான், தனக்கு இப்படியெல்லாம் நடப்பதாகவும் சொல்கிறார்.. பல வருடங்களாகவே இதுபோன்ற தொந்தரவுகள் தனக்கு வருவதாக சொல்பவர், ஏன் ஏற்கனவே இதை பற்றி போலீசில் புகார் தரவில்லை? இது ஒருவகையான மனநோயாகவும் இருக்கலாம்..
நடிகை கனகா
சமீபத்தில் நடிகர் ஸ்ரீ இப்படியான பாதிப்புக்கு ஆளானார்.. இன்று பல நல்ல உள்ளங்கள் அவரை மீட்டு நல்லபடியாக கொண்டுவந்துள்ளனர்.. நடிகை கனகாவும் இப்படித்தான்.. தேவிகா மரணத்துக்கு பிறகு, தன் அம்மாவின் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.. கனகா கல்யாணமும் செய்துக்கல.. இப்படி மன அழுத்தம் பல வகைகளில் பாதிக்கலாம்.. பலவீனமான மனதுடையவர்களாலும், கடினமான சூழலை எதிர்கொள்ள முடிவதில்லை.
அதுபோல, தனுஸ்ரீக்கும் மன அழுத்தம் இருக்கலாம்.. தனிமைப்படுத்தி கொள்ளும்போது, மேலும் அது சிக்கலாகிவிடுகிறது.. ஒருவேளை தனுஸ்ரீயும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், கவுன்சிலிங் தந்து சரிப்படுத்த வேண்டும். தனுஸ்ரீ சட்டத்தின் உதவியையும் நாட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications