நடிகை திரிஷா வீட்டில் திடீர் பங்க்ஷன்.. குவிந்த பிரபலங்கள்.. இது பலருக்கு கிடைக்காத பாக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில நாட்களாகவே திரிஷா சோசியல் மீடியா பக்கத்தில் வழக்கமான பதிவுகள் எதையும் வெளியிடாமல் இருந்தார். இதனால் திரிஷா சோகத்தில் இருக்கிறாரா? அவரை சுற்றி வரும் வதந்திகளால் மன வருத்தத்தில் இருக்கிறாரா? அவரைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுக்கவில்லை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் திரிஷா இப்போது தன்னுடைய வீட்டில் நடந்த திடீர் கொண்டாட்டத்தை இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்து இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. திரிஷா இதற்கு நேரடியாக எந்த விளக்கமும் கொடுக்காமல் இருப்பதால் அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு முன்பும் வதந்திகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதற்கு பதிலாக சோசியல் மீடியா பக்கத்தில் ஸ்டோரி மூலமாகவே பதில் சொல்லியிருக்கிறார்.

Trisha vijay

திரிஷா பாட்டி பிறந்தநாள்

ஆனால் தற்போது வெளியாகி வரும் சில ஸ்டோரிகளை பார்க்கும்போது திரிஷா வழக்கம் போல மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வது போல தான் இருக்கிறது. திரிஷா பாட்டி பிறந்தநாள் போட்டோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. திரிஷாவின் அம்மா 70வது பிறந்தநாளை சமீபத்தில் தான் கொண்டாடினார். அப்போது கூட பலரும் திரிஷாவின் அம்மா இவ்வளவு இளமையாக இருக்கிறாரே? இவருக்கு 70 வயதா என்று ஆச்சரியப்பட்டனர். இப்போது அவருடைய பாட்டியின் பிறந்தநாளையும் திரிஷா கொண்டாடி இருக்கிறார்.

Trisha vijay

திரிஷா வீட்டில் விசேஷம்

திரிஷாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே திரிஷா பேட்டிகளில் பேசும்போது கூட தன்னுடைய தோழிகள் குறித்து பேசி இருக்கிறார். எனக்கு என்னுடைய தோழிகள்தான் எப்போதும் ஸ்ட்ரஸ் ரிலீப். அவங்க கூட இருந்தாலே நான் எல்லா கஷ்டங்களையும், கவலைகளையும் மறந்து விடுவேன். நாங்க எப்போதும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம்.. எங்க கூட்டத்தில் சோகத்திற்கு இடமில்லை என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

திரிஷாவின் தோழிகள்

அதேபோலத்தான் இப்போது திரிஷாவின் பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட திரிஷா அவருடைய தோழிகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவது, பிறகு செல்லமாக விளையாடுவது, அவருடைய பிறந்தநாள் கேக் போட்டோக்கள் என விதவிதமாக புகைப்படங்களை திரிஷா ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார். திரிஷாவின் தோழிகளில் ஒருவர் பகிர்ந்த போட்டோவை திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ரீஷேர் செய்து இருக்கிறார். அதில் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் With all my cuties is one frame என்ற கேப்ஷன் கொடுத்து இருக்கிறார்.

Trisha vijay

திரிஷா பற்றிய விமர்சனம்

சில நாட்களாகவே திரிஷா பற்றிய விமர்சனம் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. அவர் நடிகையாக இருந்தாலும் அரசியல் கலத்திலும் முதல்வர் விஜயின் பெயருடன் இவருடைய பெயரும் இணைத்து பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஆனால் இதைப் பற்றி எதற்கும் பதில் சொல்லாத திரிஷா தன்னுடைய பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செம ஜாலியாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+