நான் சாகும்போது இந்த நடிகர் என் பக்கத்தில் இருக்கணும்.. காரணம் இதுதான்! நடிகை வடிவுக்கரசி எமோஷனல்
சென்னை: நடிகை வடிவுக்கரசி பல வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்திருக்கிறார். ஆனால் தான் இறக்கும் நேரத்தில் என் பக்கத்தில் ஒரு நடிகர் இருக்க ஆசைப்படுகிறேன் என்று அந்த நடிகர் பற்றி பேட்டி ஒன்றில் வடிவுக்கரசி பேசியிருக்கிறார்.
நடிகை வடிவுக்கரசி சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் சில திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார். அதிலும் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனை பாடாய்படுத்தி எடுத்த வடிவுக்கரசியை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

முதல் மரியாதை திரைப்படத்தில் வடிவுக்கரசி பேசும் குத்தலான பேச்சை பார்த்து அவரைத் திட்டி தீர்க்காத ரசிகர்களே கிடையாது என்று சொல்லலாம். அதுபோல ரஜினி நடிப்பில் உருவான அருணாச்சலம் திரைப்படத்தி கூன் போட்ட பாட்டியாக வந்து பலரையும் மிரள வைத்தவர். 90ஸ் கிட்ஸ்களில் சூனியக்கார கிழவி கதையை கேட்கும் போதெல்லாம் வடிவுகரசி முகம் தான் பலருக்கும் நினைவில் வந்திருக்கும்.

அதுபோல எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்திவிடும் வடிவுக்கரசி இப்போது சினிமா மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில நடிகைகள் புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் பல தலைமுறை நடிகர்களோடு நடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை வடிவுக்கரசியும் ஒருவர்.

சிவாஜி காலத்திலிருந்து இப்போது உள்ள இளம் கதாநாயகர்களுடனும் கூட நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் குறித்து பேசி இருந்தார். அதில் என்னுடைய ஆசை என்னவென்றால் நான் சாகும்போது நடிகர் விஜய் சேதுபதி என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான்.

விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு புள்ள மாதிரி. அவருடைய கேரக்டர் அவ்வளவு அழகாகவும் எதார்த்தமாகவும் இருக்கும். விஜயகாந்துக்கு பிறகு எனக்கு விஜயகாந்தை நினைவுபடுத்தும் நபர் என்றால் விஜய் சேதுபதி தான். நான் ஃப்ரீயாக இருக்கும் போதெல்லாம் விஜய் சேதுபதிக்கு போன் செய்து பேசுவேன்.

திடீரென்று பார்க்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதி இருக்கும் இடத்திற்கே போய் விடுவேன். ஒரு நாள் விஜய் சேதுபதி நாம கண்டிப்பா ஒரு படம் பண்ணனும் அம்மா என்று சொன்னார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்கு காரணம் நான் விஜய் சேதுபதியிடம் பேசுவதற்கும் அவரை தேடி அவர் இருக்கும் இடத்தில் போய் பார்ப்பதற்கும் வாய்ப்புக்காக தான் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று சிலர் சொல்லிவிட்டால் எனக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.
எனக்கு விஜய் சேதுபதி எப்பவும் பிள்ளை மாதிரி தான். அதனால் நானாக எந்த வாய்ப்பும் உங்களிடம் கேட்கவே மாட்டேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். அதுபோல அவரிடம் எனக்கு ஏதாவது நடந்து விட்டது என்று தெரிந்தால் முதல் ஆளாக நீங்க என் பக்கத்தில் நிற்கணும் என்று சொல்லி இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் வடிவுக்கரசி பேசியிருக்கிறார்.

-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications