மேடையில் தெய்வமகள் பிரகாஷ் கூறிய வார்த்தை..வருத்தத்தில் வாணி போஜன் கூறிய பதில்..இப்பவும் இப்படி தானா
சென்னை: நடிகை வாணி போஜன் சமீபத்தில் ரசிகர்களோடு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு தெய்வமகள் சீரியல் டீம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
சின்னத்திரையில் அறிமுகம் ஆகி வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறிய நடிகை வாணி போஜன் தான் நடித்து பிரபலமான சீரியல் நடிகர்களை இன்னும் மறக்கவில்லை என்று பல தகவல்களை கூறி இருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு தெய்வமகள் சத்தியாவும் பிரகாஷூம் பேசிக்கொண்ட வீடியோவை ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

தெய்வமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பான எவர்கிரீன் சீரியலில் மாஸான சீரியல் என்றால் அது தெய்வமகள் சீரியல் தான். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும், அதிகமான ரசிகர்கள் இப்ப வரைக்கும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கருத்து கூறி வருகிறார்கள். பல நடிகர்கள் வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி சின்ன திரையில் கலக்குவார்கள். ஆனால் நடிகை வாணி போஜன் இந்த சீரியலின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து தற்போது வெள்ளி திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தெய்வமகள் சத்தியா
சின்னத்திரையில் பலரும் இப்ப வரைக்கும் வாணி போஜனை சத்தியா என்றுதான் அழைத்து வருகிறார்கள். வாணி போஜன் பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் ஹிட் கொடுத்து வரவேற்பை ஏற்படுத்தியது என்றால் தெய்வமகள் சீரியல் தான் இந்த சீரியலில் இவருடைய போல்டான கேரக்டர் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதுவும் பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் கேரக்டராக இவர் இருக்கிறார் என்று பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். இதற்குப் பிறகு வாணி போஜன் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலை விடவும் தெய்வமகள் சீரியலுக்குத்தான் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.

வதந்தி
தெய்வ மகள் சீரியலில் சத்தியா மற்றும் பிரகாஷ் ஜோடி பொருத்தத்தை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இவர்களுக்குள் ஏற்படும் காதல், மோதல், பிரச்சனைகள், காரணமாகவே இவர்கள் இருவரும் நிஜமான ஜோடிகள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அது மட்டும் அல்லாமல் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது. ஏற்கனவே பிரகாஷாக நடித்த கிருஷ்ணாவிற்கு நடிகை சாயா சிங்கோடு திருமணமாகி இருந்தது பலருக்கும் அப்போது தெரியாது.

பீல் பண்ணும் வாணி போஜன்
இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களோடு மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டிருந்த வாணி போஜனுக்கு நடிகர் கிருஷ்ணா அதாவது பிரகாஷ் போன் செய்து வாழ்த்து கூறியதும், வாணி போஜன் சற்று தடுமாறி விட்டார். எனக்கு கிருஷ்ணா ரொம்பவே நல்ல பிரண்ட். அவரை பார்க்கும் போதெல்லாம் நான் எப்போது நீ சினிமாவுக்கு வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்போது இருக்கும் நடிகர்களுக்கு போட்டியாக நடிக்கும் திறமை இவருக்கும் இருக்கிறது. ஆனால் எங்கேயோ சர்க் ஆகி அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று வாணி போஜன் பீல் பண்ணி இருக்கிறார்.

இன்னும் டச்சிங் இருக்கிறது
அது மட்டுமல்லாமல் இப்போதும் நான் தெய்வமகள் சீரியல் டீம் ஓடு நல்ல நட்பாக இருக்கிறோம். சில நாட்களுக்கு முன்புதான் குமார் மாமா எனக்கு போன் செய்தார். அது மட்டுமல்லாமல் ரேகா அதுதான் எங்க வீட்டின் அன்னியர் அவங்களும் என்னோடு நல்ல டச்சில் இருக்கிறாங்க. அடிக்கடி நாங்கள் பேசிக் கொள்ளுவோம் என்று இவர் பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், அப்போ எப்போது தெய்வமகள் 2 வரும் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்ப்போடு கேள்வி எழுப்பி வருகிறார்கள் வருகிறார்கள்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications