நடிகை தீபிகா படுகோன் வரிசையில் நடிகை வனிதாவின் மகள்.. அவரே வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய மகள் நடிக்க வருவது குறித்து சில அப்டேட்டுகளை கொடுத்திருக்கிறார். அது பலருடைய வரவேற்பை பெற்று வருகிறது அதே நேரத்தில் நடிகை வனிதாவின் மகள் யாரோடு நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போம் இணையத்தில் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்த கேள்விகளுக்கு நடிகை வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு கொடுத்திருக்கிறார் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடு சந்திரலேகா, மாணிக்கம் போன்ற சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த வனிதா விஜயகுமார் பிறகு திருமணம் முடிந்ததும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையிலும் தன்னுடைய பெற்றோருடனும் ஏற்பட்ட பிரச்சனை காரணங்களால் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானார்.
பிறகு தன்னுடைய குழந்தைகளோடு வனிதா தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களின் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் கெஸ்ட் ரோலாகவும் நடித்து வருகிறார்.
அதோடு சில திரைப்படங்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தனியாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் சமையல் குறிப்புகள் மற்றும் பல டிப்ஸ்களை சொல்லி வருகிறார். அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்பவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை வனிதாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் ஜோவிதாவிற்கு சமீபத்தில் 18 பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
ஜோவிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடுத்த கதாநாயகி ரெடி ஆகியாச்சு என்று கருத்து தெரிவித்து வந்த நிலையில் அது குறித்து வனிதா பிரபல பத்திரிக்கைக்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். அதில் எனது மகள் ஜோவிதா சினிமாவில் நடிப்பது உறுதி தான். நடிப்புக்காக அவர் மும்பையில் பிரபலமான நடிகர் அனுபம் கோர்படிப்பு நடிப்பு பயிற்சி இன்ஸ்டியூட்டில் ஒரு வருட பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்த இன்ஸ்டிட்யூட்டில்தான் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனா, ப்ரீத்தி ஜிந்தா, கிருத்திக் ரோஷன், வருண் தவான் உட்பட பலர் அங்குதான் பயிற்சி பெற்று நடிக்க வந்தார்கள். அந்த வரிசையில் என்னுடைய மகளும் அங்கு படித்து விட்டு வந்திருக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது ஆகியுள்ளது.
சினிமா கதாநாயகியாக நடிப்பதற்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. நல்ல கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் எதிர்பார்க்கிறோம். நல்ல கதாபாத்திரம் வந்ததும் எனது மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என்று கூறியிருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications